கிழக்கு பல்கலையில் முற்றுகையிட்ட மாணவர்கள் வெளியேற நீதிமன்றம் உத்தரவு
2017-08-11 16:07:29 | General

ஏறாவூர் நிருபர்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு - வந்தாறுமூலை வளாக நிருவாகக்கட்டிடத்தை முற்றுகையிட்டுள்ள மாணவர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறவேண்டுமென இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்வி மற்றும் நிருவாக நடவடிக்கைளுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது என்றும் நீதிமன்றம் மாணவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

நிருவாக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்பட்டு நீதிமன்றில் பதில் வி.தியாகேஸ்வரன் முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்ட மாணவர்கள் 12 பேரும் தலா இருவர் கொண்ட சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் எதிர்வரும் திங்கட்கிழமையன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் மீண்டும் ஆஜராகவேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டது.

கிழக்கு பல்கலைக்கழக விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் நடைபெற்றது. இதன்போது நிருவாக சபை பிரதிநிதிகளும் குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்பட்ட மாணவர்களும் ஆஜராகினர்.

TOTAL VIEWS : 425
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
xj8lr
  PLEASE ENTER CAPTA VALUE.