கிண்ணியாவில் டெங்கை கட்டுப்படுத்த அமைச்சர் ரிசாத் துரித நடவடிக்கை
2017-03-17 16:18:06 | General

கிண்ணியா நிருபர்


கிண்ணியாவில் டெங்கு நோயினால் மக்கள் படுகின்ற அவஸ்தைகளை மீண்டும் ஜனாதிபதியை சந்தித்து நேரில் விளக்குவதோடு மேலும் பல அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.


கிண்ணியாவில் அமைச்சர் ரிசாத் தலைமையில் கிண்ணியா பொதுநூல் நிலையத்தில் கலந்துரையாடல் ஒன்று  இடம்பெற்றுள்ளது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், கிண்ணியா முன்னாள் நகரபிதா ஹில்மி மஹ்ரூப் உட்பட பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர், வைத்திய அதிகாரிகள், மருத்துவ அலுவலர்கள், ஜம்மியத்துல் உலமா, மஜ்லிஸுல் ஸுரா பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.


பாதிக்கப்பட்ட டெங்கு நோயாளிகளின் பராமரிப்பு தொடர்பிலும் நோய் தீவிரமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலும் இடம்பெறும் நடவடிக்கைகளுக்கு தான் நிதியுதவியளிப்பதாக தெரிவித்த அமைச்சர், சுகாதார அதிகாரிகளிடம் அவசரத் தேவைகள் குறித்த விபரங்களைப் பெற்றுக்கொண்டார்.


தற்போதைய வைத்தியசாலையின் களஞ்சியசாலை ஒன்றிலுள்ள பொருட்களை அப்புறப்படுத்துவதற்கான கொள்கலன்களை வாடகைக்கமர்த்துவதற்கு ரூபா 2 மில்லியனை அவசரமாக ஒதுக்குவதாக தெரிவித்த அமைச்சர், இடவசதியில்லாமல் வீடுகளிலேயே சிகிச்சை பெற்று வரும் வெளிநோயாளர்களை தங்க வைப்பதற்கென உத்தேசிக்கப்பட்டுள்ள கிண்ணியா ஜாயா வித்தியாலயத்துக்கான பௌதிக ஆளணி வசதிக்கென 5.9 மில்லியன் ரூபாவையும் உடனடியாக ஒதுக்குவதாக தெரிவித்தார். 

இந்த இக்கட்டான நேரத்தில் நோயாளிகளுக்கு சிரமம் பாராது பணிபுரியும் சுகாதார துறையினருக்கும் டெங்கு பரவாது தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தொண்டர்கள், படையினருக்கும் நன்றி தெரிவித்த அமைச்சர், மனித உயிர்கள் என்ற உயர்ந்த எண்ணத்தில் பணிகளை தொடர்ந்தும் மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

TOTAL VIEWS : 1034
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
nxgp5
  PLEASE ENTER CAPTA VALUE.