கொழும்பு மாநகர குப்பைகளுக்கு இன்னும் இரு நாட்களில் முடிவு; அமைச்சர் மனோ கணேசன்
2017-07-06 15:43:39 | General

கொழும்பு மாநகரத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகள் தற்சமயம் துரித கதியில் அகற்றப்பட்டு வருகின்றன.  இது தொடர்பில் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலைமையில் செயற்படும் செயலணி இந்த பணிகளை கண்காணித்து வருவதாக  அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்த செயலணியில் மேல்மாகாண சபை உறுப்பினர் குருசாமியை என் சார்பாக நியமித்துள்ளேன். எனவே கொழும்பு மாநகர பகுதியில் குப்பைகள் இன்னமும் அகற்றப்படாத இடங்கள் இருக்குமாயின் அவற்றை உடனடியாக 0777372640 என்ற இலக்கத்துடன்  தொடர்பு கொண்டு,  மேல்மாகாண சபை உறுப்பினர் குருசாமியிடம் அறிவிக்கலாம்.  

இதற்கு மேலதிகமாக வடகொழும்பு, மத்திய கொழும்பு, கொழும்பு பிரதேச செயலக வலய பகுதியில் குப்பை அகற்றும் மற்றும் சேகரிக்கும் விவகாரங்கள் தொடர்பாக மக்களை தெளிவுபடுத்தும்  செயற்திட்டம் மற்றும் சிரமதானப் பணிகளும் எதிர்வரும் 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று முன்னெடுக்கப்படும். 

இதில் ஜனநாயக மக்கள் முன்னணி மாகாணசபை உறுப்பினர்கள், முன்னாள் மாநகரசபை உறுப்பினர்கள், ஜனநாயக இளைஞர் இணைய அங்கத்தவர்கள் கலந்துகொள்வார்கள். 

TOTAL VIEWS : 931
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
1jcyj
  PLEASE ENTER CAPTA VALUE.