கல்லடி கடற்கரையில் கரையொதுங்கிய சடலம்
2017-05-16 17:23:26 | General

பட்டிருப்பு நிருபர்


மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


கல்லடி திருச்செந்தூர் பகுதியில் உள்ள கடற்கரையிலேயே கரையொதுங்கிய நிலையில் இந்த ஆணின் சடலம் மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.


பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற காத்தான்குடி பொலிஸார், இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சுமார் 35 வயது மதிக்கத் தக்க ஆணின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.


சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லையென தெரிவித்த பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


குறித்த சடலத்தினை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TOTAL VIEWS : 982
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
kgw2p
  PLEASE ENTER CAPTA VALUE.