28.8 ஏக்கர் காணி ஊறணி பகுதியில் விடுவிப்பு
2017-04-07 14:20:04 | General

வலிகாமம் வடக்கு இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த மக்களின் ஊறணிக் கிராமத்தின் 28.81 ஏக்கர் காணி இன்று மக்களின் பாவனைக்காக விடுவிக்கப்பட்டது.
 

யாழ்;.மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராட்சி தலைமையில் காணி விடுவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது விடுவிக்கப்பட்ட காணியின் உறுதிபத்திரத்தை கட்டளைத்தளபதி அரசாங்க அதிபர் என்.வேதநாயகனிடம் வழங்கி வைத்தார்.
 

1990ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கை மூலம் இப் பகுதியை விட்டு வெளியேறிய மக்கள் கடந்த 27வருடங்களின் பின்னர் தமது சொந்த நிலங்களை இன்று பார்வையிட்டனர். ஆனால் மக்கள் தமது காணிகள் மற்றும் வீடுகளை அங்கலாப்புடன் பார்வையிட்டதனை அவதானிக்க முடிந்தது.

TOTAL VIEWS : 3438
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
txu1o
  PLEASE ENTER CAPTA VALUE.