இளைஞனின் படுகொலை; சகிக்க முடியாத செயல்; வடக்கு முதல்வர் கண்டனம்
2017-07-12 09:59:54 | General

த.வினோயித்


யாழ்.வடமராட்சி கிழக்கில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் படுகொ லை செய்யப்பட்டமை மிகவும் மோசமான சம்பவம் எனக் கூறியிருக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் பொலிஸார் ஒருவர் சக தமிழ் இளைஞர் ஒரு வர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி படுகொலை செய்ததாகக் கூறப்படுவது சகிக்க இயலாத ஒரு செயலெனவும் கூறியுள்ளார். 


கடந்த ஞாயிற்றுக்கிழமை வடமராட்சி கிழக்கில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நேற்று செவ்வாய்க்
கிழமை முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்;


இச்சம்பவத்தில் பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியமை மிகவும் பிழையான ஒரு நடவடிக்கையாகும். தவறே செய்திருந்தாலும் அவர்களை தடுப்பதற்கு பல வழிகள் இருக்கின்றன. குறிப்பாக, வாகனத்தின் சில்லுக்கு சுட்டிருக்கலாம். அ தேபோல் அடுத்த பக்கத்தில் கடமையிலிருக்கும் பொலிஸாருக்கு கூறி வாகனத்தை தடுத்திருக்கலாம். இப்படிப் பல வழிகள் இருக்கின்றன.

ஆனால் அவற்றை கருத்தில் கொள்ளாமல் துப்பாக்கிச் சூடு நடத்தி இளைஞர் ஒருவரை கொலை செய்திருக்கின்றமை மிகவும் தவறானது. அது மட்டுமல்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருக்கின்றார். 


அதேபோல் துப்பாக்கி சூடு நடத்தவும் ஒருவரைக் கொல்லவும் முக்கியமான காரணங்கள் இருக்கவேண்டும். குறிப்பாக சுய பாதுகாப்புக்கு பாதகம் உண்டாக்கப்படும்போது இவ்வாறான துப்பாக்கிச் சூ ட்டு சம்பவங்கள் நடப்பதுண்டு. ஆனால், இங்கே அவ்வாறான ஒரு நிலை இல்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு ஒரு இளைஞர் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்.


அதனை விட தமிழ் பொலிஸார் ஒருவர் சக தமிழ் இளை ஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்ததாகக் கூறப்படுவது சகிக்க இயலாத ஒரு செயலாகவே அமைந்திருக்கின்றது. இந்தவகையில் துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். இந்த விடயத்தை தொடர்ந்து பார்க்க வேண்டுமென்றார். 

TOTAL VIEWS : 1658
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
r3krb
  PLEASE ENTER CAPTA VALUE.