கைது செய்யக் கூடாது; ஞானசாரர் மனு
2017-06-14 09:20:58 | General

ந.ஜெயகாந்தன்


தன்னைக் கைது செய்ய முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடையுத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை  மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

தன்மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக திட்டமிட்ட குற்றச் செயல்கள் தொடர்பான பொலிஸ் விசாரணை பிரிவினால் நடத்தப்படும் விசாரணைகள் முடியும் வரை தன்னைக் கைது செய்ய முடியாத வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரியே நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தனது சட்டத்தரணியூடாக அவர் நேற்று செவ்வாய்க்கிழமை இந்த மனுவை உயர் 
நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.


கடந்த காலங்களில் இடம்பெற்ற சில சம்பவங்கள் தொடர்பாக தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அடிப்படையாக கொண்டு, திட்டமிட்ட குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், அந்த விசாரணை முடிவதற்கு முன்னரே தன்னைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இவ்வாறு கைது செய்யப்பட்டால் இது தனது அடிப்படை உரிமை மீறல் எனவும் அவர் அந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதன்படி, இந்த விசாரணைகள் முடிவடைந்து சட்ட மா அதிபரின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளும் வரை தான் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பிக்குமாறு அவர் அந்த மனுவினூடாக நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார். 


அவரின் இந்த மனுவில் பிரதிவாதிகளாக திட்டமிட்ட குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட நான்கு பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 

 

TOTAL VIEWS : 664
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
xdxe2
  PLEASE ENTER CAPTA VALUE.