வானிலிருந்து வீழ்ந்த மர்மப் பொருள் எரிகல் என உறுதி
2017-10-19 09:30:20 | General

விண்கல் ஒன்றின் பாகம் என கருதப்படும் மர்ம பொருள் ஒன்று மாத்தறை பிரதேசத்தில் நேற்று இரவு வீழ்ந்துள்ளதாக ஆதர் சி கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

புவியின் வளிமண்டலத்தில் எதிர்பாராத விதமாக நுழைந்த விண்கல்லின் பகுதியே அங்கு வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த எரிகல்லை பொது மக்கள் தொட முயற்சிக்க வேண்டாம் எனவும் அது பற்றி தகவல் தெரிவிக்க 0714800800 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைக்குமாறும் அந்த மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

ஆதர் சி கிளார்க் மத்திய நிலையம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வு விரிவுரையாளர் சந்தன ஜயரட்ன இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார். 

பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் ஒரு மர்மப் பொருள் வானில் இருந்து வீழ்வதை பொதுமக்கள் அவதானித்துள்ளனர். 

விண்ணில் இருந்து ஏதேனும் ஒரு பொருள் வீழும் போது வெளிச்சம் மற்றும் சத்தம் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

TOTAL VIEWS : 558
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
qw8go
  PLEASE ENTER CAPTA VALUE.