சா/த பரீட்சை நாளை ஆரம்பம்
2016-12-05 16:36:05 | General

ந.ஜெயகாந்தன்


க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நாளை 6ஆம் திகதி நாடெங்கிலும் 5,669 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமாகவுள்ளது.


இந்தப் பரீட்சைக்கு  நாடெங்கிலுமிருந்து பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களின் கீழ் 700,000 மாணவர்கள் தோற்றவுள்ளதுடன், பரீட்சை கடமைகளுக்காக 65,524 பேர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


5,669 பரீட்சை மத்திய நிலையங்களும் 538 பரீட்சை இணைப்பு நிலையங்களும் இயங்கவுள்ளன.


நாளை முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை இந்த பரீட்சைகள் நடைபெறவுள்ளது. தினமும் காலை 8.30 மணியளவில் பரீட்சைகள் ஆரம்பிக்கவுள்ளதுடன், 8.00 மணிக்கு முன்னதாகவே பரீட்சை மண்டபத்திற்கு வந்துவிடுமாறு பரீட்சைகள் திணைக்களம் பரீட்சார்த்திகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.


இதேவேளை பரீட்சை மண்டபத்திற்குள் செல்லுபடியான ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் அடையாள அட்டைகள் மற்றும் எழுது பொருட்களை தவிர வேறு எந்தப் பொருட்களையும் கொண்டு  செல்ல முடியாது எனவும் யாரேனும் ஸ்மார்ட் கைக்கடிகாரம் மற்றும் கையடக்க தொலைபேசிகளை உள்ளே கொண்டு சென்று பிடிபட்டால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையெடுக்கப்படுமெனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.


அத்துடன் பரீட்சைகள் தொடர்பான ஏதேனும் முறைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் இருப்பின் 1911, 0112-784208, 0112-784537 என்ற இலக்கங்களை தொடர்புகொள்ளுமாறு பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

TOTAL VIEWS : 10075
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
s5hzb
  PLEASE ENTER CAPTA VALUE.