1052 வெற்றிடங்கள்: அவற்றில் பட்டதாரிகளை நியமனம் செய்க
2017-04-07 10:34:29 | General

வட மாகாணத்தில் திணைக்களங்களில் 1052 வெற்றிடங்கள் உள்ளன. அந்த வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமனம் செய்யுமாறு படி வட மாகாண ஆளுநருக்கு அறிவித்துள் அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

வட மாகாண சபையின் 90ஆவது  அமர்வு நேற்று  நடைபெற்றது. இந்த அமர்வில் மாகாண சபை உறுப்பினர், எஸ்.சுகிர்தன் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவைத் தலைவர் இதனைத் தெரிவித்தார்.

பட்டதாரிகள் கடந்த 39 நாட்களாக தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்க்கோரி பொராடி வருகின்றனர். அவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண  மாகாண சபை எடுத்த நடவடிக்கை என்ன என சுகிர்தன் கேள்வி எழுப்பினார்.

கடந்த மார்ச் 14 ஆம் திகதி இது குறித்து சபையில் பேசபட்டதற்கு இணங்க மார்ச் 18 ஆளுநருக்கு கடிதம் அனுப்பபட்டுள்ளது. 

வட மாகாண  சபைக்குட்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவி, மாகாண சுகாதார அமைச்சு,  முதலமைச்சர் அமைச்சு, கல்வி அமைச்சு ஆகியவற்றில் 1052 வெற்றிடங்கள் உள்ளன.  அவை தொடர்பாக ஆரய்ந்த நடவடிக்கை எடுக்கும்படி ஆளுநரிடம் கேட்கப்பட்டு ள்ளது எனவும் அவைத் தலைவர் கூறினார்.

TOTAL VIEWS : 254
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
qwwy6
  PLEASE ENTER CAPTA VALUE.