கொக்குவில் வாள்வெட்டு சம்பவம்  தேடப்பட்டவர்களில் மற்றொருவர் கைது 
2017-08-06 00:06:11 | General

யாழ்.கொக்குவில் பகுதியில் வைத்து பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கொக்குவில் அம்பாள் வீதியைச் சேர்ந்த புஸ்பராஜா தக்சன் எனும் இளைஞரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த இளைஞர் பொலிஸார் மீது வாள்வெட்டை மேற்கொண்டவர்கள் பயன்படுத்திய மோட்டார்சைக்கிளின் உரிமையாளர் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பொலிஸாரின் விசாரணைகளின் பின் ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனினும், இந்த வாள்வெட்டு சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் முன்னாள் போராளி என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

TOTAL VIEWS : 465
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
qh9gd
  PLEASE ENTER CAPTA VALUE.