16 மணித்தியால நீர்வெட்டு
2017-07-10 13:26:39 | General

அத்தியவசிய பராமரிப்புப் பணிகளின் நிமித்தம் களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை மறுதினம் 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகானமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

இதன்படி, காலை 08.00 மணி முதல் இரவு 12.00 மணி வரை இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. 

வாத்துவ, வஸ்கடுவை, பொதுபிடிய, மொரோன்துடுவ, கட்டுகுறுந்த, நாகொடை, பெந்தோட்டை, பயாகலை மற்றும் வடக்கு, தெற்கு களுத்துறை ஆகிய பகுதிகளிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. 

அதேபோல், போம்புவல, மஹ்கொன, களுவாமோதர, மொரகல்ல, தர்கா நகர், அளுத்கம மற்றும் பிலம்நாவத்தை ஆகிய பகுதிகளிலும் இக் காலப் பகுதியில் நீர் விநியோகம் தடைப்படவுள்ளன. 

TOTAL VIEWS : 1527
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
nr7yd
  PLEASE ENTER CAPTA VALUE.