யாழ். நீதிபதிகளை அவதூறாக விமர்சித்தவருக்கு விளக்கமறியல்
2016-11-24 16:29:54 | General

யாழ்நகர் நிருபர்

யாழ்ப்பாண நீதிமன்றங்களின் நீதிபதிகளையும் அவர்களால் வழங்கப்படுகின்ற தீர்ப்புகளையும் சமூக வலைத்தளங்களில் அவதூறாக விமர்சித்து  வெளியிட்டு வரும் ஒருவரை  விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;

 பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் யாழ்ப்பாண  நீதிமன்றங்களின் நீதிபதிகள் தொடர்பாகவும் அவர்களால் வழங்கப்படுகின்ற தீர்ப்புகள் தொடர்பாகவும் தொடர்ச்சியாக சிலர் அவதூறான விமர்சனங்களை   வெளியிட்டு வந்தனர்.

இதனையடுத்து நீதிபதிகளையும் நீதிமன்ற தீர்ப்புகளையும் விமர்சிப்போரை கைது செய்ய வலியுறுத்தியும் இவற்றுக்குக் கண்டனம் தெரிவித்தும் வடமாகாண சட்டத்தரணிகள் அண்மையில் ஒரு நாள் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

 இவ்வாறான நிலையில் குறித்த சமூக வலைத்தளங்களில் நீதிபதிகளையும் அவர்களது தீர்ப்புகளையும் அவதூறாக விமர்சித்து செய்திகளை வெளியிட்டு வந்த  ஒருவர் பிறிதொரு வழக்கிற்காக யாழ்.நீதிவான் நீதிமன்றுக்கு வருகை தந்துள்ளார்.

இதன்போது குறித்த நபரே சமூக வலைத்தளங்களில் அவதூறான செய்திகளை வெளியிடுபவர் என்பதை நீதிவானது கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார்கள்.

இதனையடுத்து குறித்த நபரை கைது செய்து விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதிவான் உத்தரவிட்டார்.

TOTAL VIEWS : 2113
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
gs1pu
  PLEASE ENTER CAPTA VALUE.