மகள்களை கடத்த திட்டமிட்டனர் கமல்ஹாசன் அதிர்ச்சி தகவல்
2017-08-14 23:41:33 | General

தனக்குப் பிடித்த 70 இந்தியப் படங்களின் பட்டியலை ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியிட்டுள்ளார் கமல். அதில் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தை வாசகர்களிடம் பகிர்ந்துள்ளார்.

கமலுக்குப் பிடித்த 70 படங்களின் பட்டியலில் அவர் நடித்த மகாநதியும் இடம்பெற்றுள்ளது. அதைப் பற்றிக் குறிப்பிடும்போது கமல் கூறி உள்ளதாவது:

எது என்னை மகாநதி கதையை எழுதவைத்தது என்று இதுவரைச் சொன்னதில்லை. இப்போது என் மகள்கள் வளர்ந்துள்ளார். எனவே இப்போது சொல்கிறேன்.

என் வீட்டில் வேலை செய்தவர்கள், என் மகளைக் கடத்தி அதன் மூலம் என்னிடம் பணம் பறிக்கத் திட்டமிட்டார்கள். இதற்கான ஒத்திகையும் நடந்துள்ளது. ஆனால் எதேச்சையாக அவர்களுடைய திட்டத்தை நான் அறிந்துவிட்டேன். எனக்குக் கோபம் வந்தது. பதற்றமானேன். என் குழந்தையின் பாதுகாப்புக்காக நான் கொலை செய்யவும் தயாராக இருந்தேன். பிறகு எனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டேன். 

அப்போது நான் புதிய கதை ஒன்று எழுதவேண்டியிருந்தது. அந்த வேலையைத் தள்ளிப்போட்டுக்கொண்டு வந்தேன். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு நான் எழுத உட்கார்ந்தபோது இந்தக் கதையைத் தானாக எழுதினேன். ஒருவேளை ஏதாவது நடந்துவிடலாம் என்கிற என் பயமும் அதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

TOTAL VIEWS : 591
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
mfaj5
  PLEASE ENTER CAPTA VALUE.