தல அஜித்தின் சர்வைவல் பாடல்; அசத்திய அனிருத்
2017-06-15 11:22:55 | General

தல அஜித் நடித்த 'விவேகம்' படத்தின் ரிலீஸை ஒவ்வொரு அஜித் ரசிகரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத், இந்த படத்தின் 26 வினாடிகள் பாடல் ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பாடல் தற்போது உலக அளவில் டுவிட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது.

சர்வைவா! சர்வைவா! சர்வைவா! என்ற தீம் மியூசிக் கொண்ட சிங்கிள் டிராக்காக வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல் முழு வடிவமாக வரும் 19ஆம் தேதி சிங்கிள் பாடலாக வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனிருத் மற்றும் யோகி ஆ பாடிய இந்த பாடல் அனைவரையும் எழுந்து ஆட்டம் போடும் வகையில் உள்ளது. மேலும் அஜித் அறிமுகமாகும் காட்சி உள்பட பல முக்கிய காட்சிகளில் இந்த தீம் மியூசிக் பயன்படுத்தப்படும் என தெரிகிறது.

TOTAL VIEWS : 593
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
evx3h
  PLEASE ENTER CAPTA VALUE.