சினிமாவுக்கு வரும் எண்ணம் இப்போதைக்கு இல்லை; மனுஷி சில்லார்
2017-11-29 09:58:51 | General

சினிமாவில் நடிக்கும் எண்ணம் எனக்கு இல்லை என்று உலக அழகி மனுஷி சில்லார் கூறியுள்ளார்.

2017ஆம் ஆண்டிற்கான உலக அழகிப் போட்டி, சீனாவின் சான்யா சிட்டியில் நடைபெற்றது. இதில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவி மனுஷி சில்லர் (21), உலக அழகியாக பட்டம் வென்றார்.

108 நாடுகள் பங்கேற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அழகி உலக அழகிப் பட்டத்தை வென்று இந்தியாவிற்கு மகுடம் சூட்டியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த 25ம் தேதி இந்தியா வந்த மனுஷி சில்லாருக்கு மும்பை சர்வதேச விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று டெல்லி சென்ற அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:

பொதுவாக உலக அழகி பட்டம் வென்றவர்களுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும், வாய்ப்பும் அதிகளவில் இருக்கும். ஆனால், அது போன்ற எண்ணமெல்லாம் எனக்கு கிடையாது. அதுபற்றி எதுவும் இப்போது சொல்ல இயலாது என்று கூறியுள்ளார்.

இருந்தாலும், எதிர்காலத்தில் எனக்கு பாலிவுட் நடிகர் அமீர் கானுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நான் கண்டிப்பாக நடிப்பேன். ஏனென்றால், அவருடைய படங்கள் அனைத்தும் உணர்வுப்பூர்வமாகவும், சவாலாகவும் இருக்கும். எனக்கு பிடித்த நடிகை பிரியங்கா சோப்ரா.

என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் டாக்டர்கள். நானும் இப்போது டாக்டருக்கு படித்து வருகிறேன். இதன் காரணமாக அடுத்த ஆண்டு 4 கண்டங்களில் உள்ள நாடுகளுக்கு செல்லயிருக்கிறேன்.

அந்த கண்டங்களில் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் கடைபிடிக்க வேண்டிய சுகாதாரம் குறித்து நான் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளேன் என்று கூறியுள்ளார்.

TOTAL VIEWS : 216
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
kaeh3
  PLEASE ENTER CAPTA VALUE.