இரட்டை வேடத்தில் மீண்டும் மெர்சல் காட்டும் விஜய்
2017-11-06 15:03:32 | General

மெர்சல் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் மீண்டும் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘கத்தி’ படத்தில், இரண்டு வேடங்களில் நடித்தார் விஜய். அட்லீ இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘மெர்சல்’ படத்தில் மூன்று வேடங்களில் நடித்திருந்தார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘ஸ்பைடர்’ படம் தோல்வியைத் தழுவியது.

இந்நிலையில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணையும் விஜய், இதிலும் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

‘துப்பாக்கி’ மற்றும் ‘கத்தி’ படங்களைப் போலவே இந்தப் படமும் சமூக அக்கறை மிகுந்ததாக இருக்கும் என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

TOTAL VIEWS : 212
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
kj5la
  PLEASE ENTER CAPTA VALUE.