அறிவித்தல் விவகாரத்தை பரபரப்பாக்க வேண்டாம்; எஸ்.பி.பி.
2017-03-20 18:19:44 | General

அனுமதியில்லாமல் இளையராஜா பாடல்களை மேடைகளில் பாடுவதற்குத் தடை விதித்து அறிவித்தல் அனுப்பப்பட்டதை அடுத்து இனி இளையராஜா இசையமைத்த பாடல்களைப் பாட மாட்டேன் என்று பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். இதையடுத்து சர்ச்சை உருவானதால் அவர் இன்னொரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.


இதையடுத்து சமூகவலைத்தளங்களில் சர்ச்சை உருவானது. தான் பாடிய பாடலைப் பாட பாடகருக்கு உரிமையில்லையா என்றும் எஸ்.பி.பி. ராஜாவிடம் அனுமதி பெறாதது ஏன் என்று கேள்வி எழுப்பபட்டு பலவிதமான விவாதங்கள் நடைபெற்றன.


இணையத்தில் சர்ச்சை எழுந்துள்ளதையடுத்து எஸ்.பி.பி. தன்னுடைய ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய எல்லா நண்பர்களுக்கும் இசை ரசிகர்களுக்கும் முக்கியமாக ஊடகவியலாளர்களுக்கும் என்னுடைய கோரிக்கை இது.

ராஜா - எஸ்.பி.பி. விவகாரத்தை பரபரப்பாக்க வேண்டாம். இது துரதிர்ஷ்டவசமானது. அவ்வளவுதான். நம் சகஜ வாழ்க்கையைத் தொடரவேண்டும். கடவுளின் படைப்பில் அனைவரும் நல்லவர்களே, சமமானவர்களே. நன்றி என்று கூறியுள்ளார்.

 

TOTAL VIEWS : 1184
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
9regv
  PLEASE ENTER CAPTA VALUE.