தணிக்கையில் 'யு/ஏ' சான்றிதழ்; நவ.30ல் வெளியாகிறது 'அண்ணாதுரை'
2017-11-05 09:27:58 | General

'அண்ணாதுரை' படத்துக்கு தணிக்கையில் 'யு/ஏ' சான்றிதழ் கிடைத்திருப்பதைத் தொடர்ந்து நவம்பர் 30ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'எமன்' படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் உருவான 'அண்ணாதுரை' படத்தில் நடித்து வந்தார் விஜய் ஆண்டனி. முழு படப்பிடிப்பும் முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. முதன்முறையாக இப்படத்தின் எடிட்டராகவும் பணிபுரிந்து வருகிறார் விஜய் ஆண்டனி.

இரட்டை வேடம் என்பதால் கிராபிக்ஸ் பணிகள் அனைத்தும் முடிந்து, தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு. தணிக்கையில் எவ்வித கட்டுமின்றி 'யு/ஏ' சான்றிதழ் வழங்கவே, நவம்பர் 30ம் தேதி வெளியாகும் என விஜய் ஆண்டனி அறிவித்திருக்கிறார்.

இப்படத்தை ராதிகா சரத்குமார் மற்றும் விஜய் ஆண்டனி இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். தெலுங்கில் 'இந்திரசேனா' என்று பெயரிலும் இப்படம் வெளியாகவுள்ளது.

TOTAL VIEWS : 154
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
s2ztf
  PLEASE ENTER CAPTA VALUE.