இனிமேல் படங்களே தயாரிக்க மாட்டோம்; லைகா நிறுவனம் அதிரடி
2017-07-06 13:09:03 | General

தமிழ் திரைப்பட உலகில் கேளிக்கை வரி மற்றும் ஜிஎஸ்டி வரி பிரச்சனை உச்சகட்ட நிலையை அடைந்துள்ளது. ஒருபுறம் திரையரங்கு அதிபர்கள் 3வது நாளாக தியேட்டர்களை மூடியுள்ளதால் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு வரும் நிலையில் இன்னொருபுறம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண தமிழ்த்திரையுலகினர் முயற்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கேளிக்கை வரி பிரச்சனை தீரும்வரை புதிய படங்களை தயாரிக்க மாட்டோம்' என லைகா நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. கமல்ஹாசனின் 'மருதநாயகம்' உள்பட பல திரைப்படங்களை தயாரிக்க திட்டமிட்டிருந்த லைகா திடீரென இவ்வாறு அறிவித்திருப்பது திரையுலகினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ரஜினி, கமல் உள்பட ஒட்டுமொத்த திரையுலகினர்களும் இரட்டை வரி விதிப்புக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டதால் வெகுவிரைவில் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு ஏற்பட்டுவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

TOTAL VIEWS : 480
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
ws4hd
  PLEASE ENTER CAPTA VALUE.