ஹீரோயினாகும் பிரபல நடிகையின் மகள்
2017-12-16 18:02:06 | Leftinraj

மறைந்த நடிகை கல்பனாவின் மகள் மலையாள படம் ஒன்றின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

நடிகை ஊர்வசியின் சகோதரியும்இ நடிகையுமான மறைந்த கல்பனாவின் மகள் ஸ்ரீமயி தாய் வழியில் நடிக்க வந்துள்ளார்.

அவர் சுமேஷ் லால் இயக்கும் குஞ்சி அம்மையும் அஞ்சு மக்களும் மலையாள படம் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார்.

சென்னையில் விஸ்காம் படித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீமயி இந்த படம் மூலம் ஹீரோயினாகிறார்.

படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் துவங்க உள்ளது. கலாபவன் சஜோன், டாம், ஸ்ரீஜித் ரவி, பினு பப்பு இர்ஷாத் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்கிறார்கள். அப்ரா பிலிம்ஸ் குஞ்சி அம்மையும் அஞ்சு மக்களும் படத்தை தயாரிக்கிறது.

கடந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ரீமயியை ஊர்வசி தான் மீடியாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

TOTAL VIEWS : 454
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
sxn9u
  PLEASE ENTER CAPTA VALUE.