அண்ணனுக்காக ஆட்டம் போட்ட ஹன்சிகா
2017-11-29 09:56:07 | General

ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்தின் திருமண விழாவில் நடிகை ஹன்சிகா ஆட்டம் போட்டு அனைவரையும் அசத்தியுள்ளார்.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஹன்சிகா. தொடர்ந்து இவரது கால்ஷீட் கிடைக்க தயாரிப்பாளர்கள் முதல் அனைவரும் தவமாய் தவமிருந்தனர்.

இந்த நிலையில், தற்போது புதுமுக நடிகைகளின் வரவேற்பைத் தொடர்ந்து ஹன்சிகாவிற்கு சினிமா வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. தற்போது பிரபுதேவா நடித்து வரும் குலேபகாவலி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தன்னுடைய சகோதரர் பிரசாந்தின் திருமணத்தையொட்டி படப்பிடிப்புகளை தள்ளி வைத்து திருமண நிகழ்ச்சிகளை விறுவிறுப்பாக கவனித்து வந்துள்ளார்.

மும்பையில் சிந்தி பாரம்பரிய முறைப்படி நடந்த இந்த திருமண நிகழ்ச்சியில், உறவினர்கள், நண்பர்கள் என்று பலரும் கலந்து கொண்டனர். தன்னுடைய சகோதரனின் திருமணம் என்பதால் ஓடி ஓடி வேலை பார்த்து திருமணத்திற்கு வருகை தந்த அனைவரும் வரவேற்று அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார். இதற்கு முன்னதாக நடந்தமெஹந்தி விழா பார்ட்டியில் செம மூடில் இந்த ஹன்சிகா சின்ன சின்னதாக ஆட்டம் போட்டார். அவரது டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையடுத்து, ஹன்சிகாவிற்கு எப்போது திருமணம் என்று கேட்டபோது குடும்பத்தினர் அனைவரும் அப்படியே மவுனமாக இருந்துவிட்டனர். கொஞ்சம் குண்டாக இருந்த ஹன்சிகா தற்போது ஒல்லியாகி வருகிறார். அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

TOTAL VIEWS : 234
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
0uhea
  PLEASE ENTER CAPTA VALUE.