விவேகம்; திரைவிமர்சனம்
2017-08-25 11:29:05 | General

விவேகம், அஜித் நடிப்பில் இயக்குனர் சிவாவுடன் ஹாட்ரிக் படமாக அமைந்துள்ளது. அஜித்தின் 2 வருட கடின உழைப்பிற்கு பலன் கிடைத்ததா என பார்ப்போம்.

படத்தின் நாயகியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். அக்‌ஷரா ஹாசன் மற்றும் விவேக் ஓப்ராய் ஆகியோரும் நடித்துள்ளனர். சத்ய ஜோதி தயாரிப்பு நிறுவனம் படத்தை தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.
 
அஜித் ஒரு இண்டர்நேஷ்னல் ஸ்பை. இராணுவத்தில் ஒரு முக்கிய பொறுப்பையையும் வகிக்கிறார். எந்த ஒரு வேலையையும் தனி ஆளாக நின்று சமாளிக்கும் வல்லமை படைத்தவர். இவரது குழுவில் விவேக் ஓபராய், செர்ஜ் குரோசன், அமிலா டெர்சிமெகிக் ஆகியோர் உள்ளனர்.
 
அதிநவீன ஆயுதம் ஒன்று பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டு அது வெடிக்க செய்யப்பட்டதால், நிலநடுக்கம் ஏற்பட்டு பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர். இதே போன்று இரண்டு அதிநவீன ஆயுதங்கள் இந்தியாவில் புதைக்கப்பட்டு உள்ளதாக இந்திய உளவித்துறைக்கு தகவல் வருகிறது. இந்த ஆயுதங்களை செயலிழக்க செய்ய அஜித்தின் உதவியை நாடுகிறது உளவுத்துறை.
 
அஜித் மற்றும் அவரது குழுவினர் இந்த விசாரணையில் ஈடுபட்டுகொண்டிருக்கும் போது, இதற்கு ஒரு திருப்பமாக உள்நுழைகிறார் அக்‌ஷராஹாசன். ஆம், அக்‌ஷராஹாசன்தான் அந்த ஆயுதத்தை ஹேக் செய்து வெடிக்க செய்திருக்கிறார் என தெரிய வருகிறது.

இதன் பின்னர் அக்‌ஷராஹாசனை கண்டுபிடித்து மீதமுல்ல இரண்டு ஆயுதங்களை செயலிழக்க செய்ய அஜித் மற்றும் அவரது குழு முற்படுகிறது. இதற்கு கருணாகரனின் உதவியை நாடுகின்றனர்.
 
இந்நிலையில், அக்‌ஷராஹாசன் ஆயுதத்தை வெடிக்க செய்யவில்லை என்பது தெரியவருகிறது. அவர் ஒரு கருவியாக மட்டுமே செயல்பட்டுள்ளார் என்பதை அஜித் தெரிந்து கொள்கிறார். இதற்கு பின்னர் கதையில் விறுவிறுப்பு துவங்குகிறது. இதுவரை அஜித்திற்கு நண்பராக தோற்றமளித்த விவேக் ஓப்ராய், அஜித்திற்கு வில்லனாக மாறுகிறார். 
 
விவேக் ஓபராய், செர்ஜ் குரோசன் மற்றும் அமிலா டெர்சிமெகிக் உள்ளிட்டோருடன் சேர்ந்து கொண்டு அக்‌ஷராஹாசனை கொலை செய்துவிட்டு ஆயுதங்களை கைப்பற்றி அதனை கோடிகளுக்கு விற்பனை செய்ய முடிவு செய்கிறார்.
 
இதற்கு தடுப்பாய் இருக்கும் அஜித்தை சுட்டுகொன்று, ஆயுதங்களை அஜித் கடத்திவிட்டதாக பழி சுமத்திவிடுகின்றனர். இதன் பின்னர் அஜித்தின் ரேஜ் துவங்குகிறது. குண்டு காயங்களுடன் மீண்டும் உயிர்த்தெழும் அஜித் தன் மீது சுமர்த்தப்பட்ட பழியை பொய் என நிரூபித்தாரா? எதிரியாய் மாறிய நண்பனை என்ன செய்தார்? என்பதே மீதிக்கதை.
 
ஹாலிவுட் தரத்தில் ஸ்பை தில்லர் கதையாக படத்தை உருவாகியிருக்கிறார் சிவா. இதற்கு அஜித் சரியான தேர்வு. 2 வருடங்களுக்கு பிறகு அஜித்தை திரையில் பார்க்கும் அவரது ரசிகர்களுக்கு படம் செம ட்ரீட்டாக அமையும்.
 
அஜித்தின் ஸ்டைலுக்கும், மாஸுக்கும் தீனி போடும் படமாக விவேகம் உள்ளது. படத்தில் அஜித்தின் மாஸ் காட்சிகள் ஏராளம். படத்திற்காக அவர் கஷ்டப்பட்டது வீண் போகவில்லை. மேலும், ராணுவ அதிகாரியாக அஜித் கம்பீர தோற்றத்துடன் அழகாய் இருக்கிறார்.

படத்தில் அஜித் மனைவியாக வரும் காஜல் அகர்வால் புதுமையான கதாபாத்திரத்தை ஏற்று ரசிக்க வைத்திருக்கிறார். அஜித் மீது அக்கறை கொள்ளும் காட்சியில் அவரது நடிப்பு சிலிர்க்க வைக்கிறது. படம் முடியும் தருணத்தில் காஜல் அகர்வாலின் நடிப்பு அப்லாஸ் அள்ளுகிறது.
 
விவேக் ஓபராய் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து ரசிக்க வைக்கிறார். படத்தில் தான் ஏற்ற கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். அக்‌ஷரா ஹாசனும் படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். 
 
படத்தில் நடித்துள்ள பிற கலைஞர்கள் தங்களது கதாபாத்திரத்திற்கு தேவையானதை கொடுத்துள்ளனர். அனிருத்தின் இசை படத்திற்கு கூடுதல் பலம். பின்னணி இசையில் மிரள வைத்துள்ளார் அனிருத்.
 
மொத்தத்தில் விவேகம், அஜித்தின் ஒன் மேன் ஆர்மி....

 

tamil.webdunia.com

TOTAL VIEWS : 939
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
hdh7z
  PLEASE ENTER CAPTA VALUE.