விண்வெளி சார்ந்த முதல் த்ரில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியீடு
2017-07-17 12:55:07 | General

ஜெயம் ரவி நடிக்கும் டிக் டிக் டிக் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகவுள்ளது.

வனமகன் படத்தைத் தொடர்ந்து சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் டிக் டிக் டிக். இது முழுக்க முழுக்க விண்வெளி சார்ந்த முதல் த்ரில்லர் படம். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இன்று காலை 11 மணிக்கு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவுள்ளது.

அண்மையில் படத்தின் இசையமைப்பாளரான டி.இமான் தனது டுவிட்டர் பக்கத்தில் டிக் டிக் டிக் படத்தின் டீசரை தான் பார்த்தபோது மெய்மறந்துவிட்டதாகவும், அப்படியே வானத்தில் பறப்பது போன்றும் உணர்ந்ததாக தெரிவித்திருந்தார். மேலும், படத்தின் டீசரும் விரைவில் வெளியாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை 11 மணிக்கு வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

TOTAL VIEWS : 213
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
z7rko
  PLEASE ENTER CAPTA VALUE.