'தளபதி 61' படத்தில் குவியும் காமெடி நடிகர்கள்
2017-06-05 13:07:49 | General

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மிக விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது.

இந்த படப்பிடிப்பில் விஜய், சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகள் உள்பட பல காட்சிகள் படமாக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் இந்த படம் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே இந்த படத்தில் வடிவேலு மற்றும் சத்யன் காமெடியில் கலக்கவுள்ள நிலையில் தற்போது இந்த படத்தில் யோகிபாபுவும் இணைந்துள்ளார்.  இவர்கள் மூவரும் சேர்ந்து நடிக்கும் காமெடி காட்சிகள் இருப்பதால் படத்தில் காமெடி முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்தில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யராஜ், சத்யன், கோவை சரளா உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார்.

TOTAL VIEWS : 654
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
siy7l
  PLEASE ENTER CAPTA VALUE.