“இப்போ ‘ரஜினி பேரவை’இ நெக்ஸ்ட் மொபைல் ap..!”
2017-12-28 18:55:55 | Leftinraj

கடந்த 40 ஆண்டுகளாக ரஜினிகாந்த் என்கிற தனிமனிதன் 'சூப்பர் ஸ்டார்' என்கிற நட்சத்திர அந்தஸ்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். அந்த நட்சத்திர மினுமினுப்பு அரசியல் களத்தில் தொடருமா?

தனது ரசிகர்களின் நீண்டநாள் கனவை நிறைவேற்றப்போகிறார் ரஜினி. கடந்த மே மாதம் சந்தித்த ரசிகர்களைவிட டிசம்பர் 26-ம்தேதி ரஜினியைச் சந்தித்த ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக்குதித்தனர். 

அதுசரி டிசம்பர் 31-ம் தேதி ரஜினி என்னதான் அறிவிக்கப்போகிறார் என்று நமக்குத் தெரிந்த வட்டாரங்களில் விசாரித்தோம்.

''ரஜினி ரசிகர்களுக்கு 2018-ம் ஆண்டின் புத்தாண்டு பரிசு  'நான் அரசியலில் தீவிரமாக இறங்குகிறேன்' என்கிற அதிரடி அறிவிப்பை வெளியிடுகிறார்இ சூப்பர் ஸ்டார். ஜனவரி 4-ம் தேதி ஶ்ரீராகவேந்திரருக்கு உகந்த தினமான  வியாழக்கிழமை  அன்று பாபா முத்திரை கொண்ட ரஜினி பேரவைக்கான மொபைல் அப்ளிகேஷனை வெளியிடுகிறார்

ரஜினி. இப்போது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக்கொள்ளும்போது பின்புறம் தெரியும் பாபா முத்திரைதான்இ ரஜினியின் அரசியல் என்ட்ரிக்கான சிம்பல்.

பெரும்பாலும்  நாற்பது வயதைக் கடந்தவர்கள்தான் ரஜினியின் தீவிர ரசிகர்களாக இருக்கிறார்கள் என்பது பலரது எண்ணம். அதை மாற்றி முப்பது வயதுக்குள் இருக்கும் இளைஞர்களை பேரவையில் உறுப்பினர்களாகச் சேர்ப்பதுதான்இ ரஜினி பேரவையின் முதல் இலக்குஇ நோக்கம் லட்சியம் எல்லாமே.

ரஜினிகாந்த் தொடங்கவிருக்கும் அரசியல் கட்சியின் பெயர் கொடியின் நிறம் எல்லாம் வெளியிடும் திட்டம் இப்போதைக்கு இல்லை. முதலில் ரஜினி பேரவையில் சேரும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பார்த்து தமிழகத்தின் பிரதான பெரிய கட்சிகளின் பல்ஸை எகிறவைக்கப் போகிறார்களாம்.

தமிழகத்தில் ஆட்சி கலைப்பு ஏற்பட்டு தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நேரத்தில் கட்சியின் பெயர் கொடியின் வண்ணம் ஆகியவற்றை வெளியிடத் திட்டமிட்டு வருகிறார்கள்.

அதுவரை ரஜினியின் அரசியல் பிரவேசம் 'ரஜினி பேரவை' என்கிற பெயரிலேயே இயங்கும். தமிழகத்தில்  பல்வேறு இடங்களில் ரஜினி பேரவைக்கான அமைப்புகளை உருவாக்குவதற்காகவும் ஒருங்கிணைக்கவும் தனியாக தகவல் தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டு ரகசியமாக செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தின் மக்கள் தொகை இப்போதைக்கு துல்லியமாகக் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.  ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளிலும் எத்தனை ஆண் வாக்காளர்கள் பெண் வாக்காளர்கள் எத்தனை கடந்த காலங்களில் இரண்டு பெரிய கட்சிகள் போட்டியிட்டபோது எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டது என்பதைக் கணித்து வருகிறார்கள்.

அ.தி.மு.க, தி.மு.கஇ காங்கிரஸ் கட்சிகளின் மீதும் பிரமுகர்கள் மீதும் ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்துவருகிறது. இந்தச் சூழ்நிலையில் 'மிஸ்டர் க்ளீன்' என்பதே ரஜினியின் இமாலய இமேஜாக கருதப்படுகிறது. 

ரஜினி அரசியலுக்கு வருவார் என்று பலகாலமாக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த அவரது ரசிகர்கள் பலர் இப்போது அ.தி.மு.க, தி.மு.க எனத் தமிழகத்தின் பல்வேறு கட்சிகளின் முக்கியப் பொறுப்புகளில் இருக்கிறார்கள்.

ரஜினி அரசியலில் அதிரடியாகக் களமிறங்கப் போவதாக டிசம்பர் 31-ம் தேதி அறிவித்தபிறகு அனைத்துக் கட்சிகளிலும் இருக்கும் ரஜினி ரசிகர்கள் அந்தந்தக் கட்சிகளில் இருந்து விலகி ரஜினி பேரவையில் இணைவார்கள்.

அப்போது அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் அதிர்ச்சியைச் சந்திக்க நேரிடும் என்று இப்போதே பீதி கிளப்புகிறார்கள். 'உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்கமாட்டேன்... உயிர் வாழ்ந்தால் இங்கேதான் ஓடிவிடமாட்டேன்' என்று கார்த்திக் பாடிய பாடலுக்கு ரஜினிகாந்த் சும்மா உதட்டை அசைக்கவில்லை. உண்மையாக வாழ்ந்து காட்டப்போகிறார் தமிழ் மக்களை வாழவைத்து மகிழப்போகிறார்'' என்று  உற்சாகமாகச் சொல்கிறார்கள் ரஜினிக்கு நெருக்கமானவர்கள்.

TOTAL VIEWS : 134
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
rpoj7
  PLEASE ENTER CAPTA VALUE.