சூரிக்கு நாயந்தாராவுடன் டூயட் பாட ஆசையாம்

2017-08-10 15:44:04 | General

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான சூரி, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“நான் 1996ம் வருடம் சென்னைக்கு வந்தேன். சினிமாவில் வாய்ப்பு தேடினேன். முதலில் படுத்து தூங்குவதற்கு ஒரு இடம் தேவை என்பதை உணர்ந்தேன். அதற்காக சினிமா ஆர்ட் டிபார்ட்மென்டில் கூலி வேலைக்கு சேர்ந்தேன். அதன்மூலம் சென்னையில் தங்கியிருப்பதற்கான வாய்ப்பை தேடிக்கொண்டேன். ஆர்ட் டிபார்ட்மென்டில் வேலை இல்லை என்றால், கூலி வேலைக்கு போய்விடுவேன். அல்லது பெயிண்டராக மாறிவிடுவேன்.

சூரி இருந்தால் அந்த இடம் கலகலப்பாக இருக்கும் என்று என்னுடன் வேலை செய்தவர்கள் சொல்வார்கள். வேலை செய்துகொண்டே மற்றவர்களை சிரிக்க வைப்பேன். முதலில் நான் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தேன். சென்னை கே.கே.நகரில் உள்ள சிவன் பார்க்கில் தான் ஒத்திகை பார்ப்போம். ஒரு நாடகத்தில் நான் வீரப்பனாக நடித்தேன். அதற்காக ரூ.400 சம்பளமாக கொடுத்தார்கள்.

சினிமாவில் நான் தலைகாட்டிய முதல் படம், ‘ஜி’. முதல் படத்திலேயே அஜித்குமார் பாராட்டும்படி, நடித்துவிட்டேன். அடுத்து நான் நடித்த படம் ‘காதல்’. ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தில் இடம்பெற்ற ‘புரோட்டா சீன்’ தான் என்னை பிரபலமாக்கியது. எல்லோருக்கும் தெரியவைத்தது.

TOTAL VIEWS : 181
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
e4dbg
  PLEASE ENTER CAPTA VALUE.