​அஜீத் இல்லாமல் நடந்த 'விசுவாசம்' பட பூஜை
2017-12-11 13:53:28 | General

அஜீத் இல்லாமல் ‘விசுவாசம்’ படத்தின் பூஜையை மிகவும் எளிமையாக போட்டு முடித்தார் இயக்குனர் சிவா.

இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜீத் நடிக்கவுள்ள 58வது படம் ‘விசுவாசம்’. ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் மூன்றாவது முறையாக சிவாவும், அஜீத்தும் இணைகிறார்கள். இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் ‘விஸ்வாசம்’ படத்தின் பூஜை சத்தமில்லாமல் மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்தது என்று கூறி ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியானது. ஆனால், இந்த படத்தில் அஜீத் இல்லை. எனவே, அஜீத் இல்லாமால் படத்தின் பூஜையை முடித்துவிட்டார் சிவா என பேச்சு அடிப்பட்டது. ஆனால், விசாரித்ததில், சிவாவின் அலுவலகத்திற்கு பூஜை போடப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில படங்களில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்த வந்த அஜீத் இந்தப்படத்தில் இளமையான தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் அஜீத்தை வித்தியாசமான ஸ்டைலில் மாற்றி காண்பிக்க இருக்கிறார் இயக்குனர் சிவா. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ளதாம்.

TOTAL VIEWS : 204
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
es1uo
  PLEASE ENTER CAPTA VALUE.