2018-ல் வெளியாகும் பிரமாண்ட படங்கள் என்னென்ன தெரியுமா?
2017-12-30 18:04:58 | Leftinraj

வருகிற திங்கட்கிழமை புத்தாண்டு பிறக்கிறது. 2017-ம் ஆண்டு தமிழில் ஓரளவு பிரபலமான படங்கள் வந்தன. மொத்தம் 201 படங்கள் வெளியாகி உள்ளன. இதில் பெரும்பாலானவை சிறிய பட்ஜெட் படங்கள்.

குறிப்பிடத்தக்க படங்களில் விஜய் நடித்த ‘மெர்சல்’ மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அஜித்தின் ‘விவேகம்’, சூர்யா நடித்த ‘சி-3’ தனுஷ் நடிப்பில் வெளியான ‘வேலைஇல்லா பட்டதாரி-2’ ஆகியவை ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட படங்களாக இருந்தன. என்றாலும் இவை சுமாரான வெற்றியை பெற்றன.

‘ஜோக்கர்’, ‘அறம்’, ‘அருவி’ போன்ற படங்கள் பேசப்பட்டன. மாதவன் - விஜய்சேதுபதி நடித்த ‘விக்ரம் வேதா’, விஷாலின் ‘துப்பறிவாளன்’, கார்த்தி நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்கள் ரசிகர்கள் விரும்பும் படங்களாக அமைந்தன.

2018-ம் ஆண்டு ரஜினியின் ‘2.0’ தமிழ் புத்தாண்டில் வெளியாகிறது. கமலின் ‘விஸ்வரூபம்-2’-ம் பிரமாண்டமான படமாக வெளியாக உள்ளது. இதுதவிர ரஜினியின் ‘காலா’, சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம், விக்ரம் நடிப்பில் உருவான ‘ஸ்கெட்ச்’,  விஷாலின் ‘இரும்புத்திரை’, ஜெயம்ரவியின் ‘டிக்டிக்டிக்’, தனுஷ் நடிக்கும் ‘வடசென்னை’, ‘மாரி-2’ ‘என்னை நோக்கிபாயும் தோட்டா’ படங்கள் வர இருக்கின்றன.

அடுத்து அஜித் நடிக்கும் ‘விசுவாசம்’ விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் புதிய படம், விக்ரம் நடிக்கும் ‘துருவநட்சத்திரம், பாண்டிராஜ் இயக்கும் கார்த்தி படம், பொன்ராம் இயக்கும் சிவகார்த்திகேயனின் புதிய படம், விஷாலின் ‘சண்டக்கோழி-2’, அதர்வாவின் ‘இமைக்கா நொடிகள்’, பிரபுதேவாவின் ‘குலோபகாவலி’, ‘யங் மங் சங்’, ஆர்யா நடிக்கும் ‘கஜினிகாந்த்’ என்று அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களும் வர இருக்கின்றன.

TOTAL VIEWS : 286
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
zxm3y
  PLEASE ENTER CAPTA VALUE.