விஜயுடன் மீண்டும் இணையும் அட்லி
2017-10-15 16:33:57 | Leftinraj

தெறி படத்தைத் தொடர்ந்த இளைய தளபதி விஜய்யுடன், இரண்டாவது முறையாக மெர்சல் படத்தில் பணியாற்றுகிறார் இயக்குனர் அட்லீ.

இந்த படத்துக்குப் பிறகு மீண்டும் இருவரும் மூன்றாவது முறையாக பணியாற்றவுள்ளனர் எனக் கூறப்படுகிறது.
 
அந்த படத்திற்காக ஆளப்போறான் தமிழன் என்ற தலைப்பை அட்லீ தற்போது பதிவு செய்துள்ளாராம்.

மெர்சல் படத்தில் வரும் ஆளப்போறன் தமிழன் பாடல் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்தே அட்லீ இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தார் எனக் கூறப்படுகிறது.

விஜய் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் அடுத்து நடிக்கவுள்ளார், அது முடிந்தவுடன் அட்லீ படம் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரியவருகிறது.

TOTAL VIEWS : 190
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
ry3nr
  PLEASE ENTER CAPTA VALUE.