மலேசிய நட்சத்திர கலை விழாவில் வெளியாகும் ரஜினியின் '2.0' டீசர்
2018-01-08 11:23:18 | General

மலேசியாவில் 6ம் தேதி நடைபெறவிருக்கும் நட்சத்திர கலை விழாவில் ரஜினி நடிப்பில் உருவான ‘2.0’ படத்தின் டீசரும் வெளியாகவுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் நட்சத்திர கலை விழா ஜனவரி 6ஆம் தேதி மலேசியாவில் நடைபெறவுள்ளது. இந்த விழாவின் போது, விஷால் நடித்த ‘இரும்புத்திரை’ டிரைலரும், அவர் நடித்த இன்னொரு படமான ‘சண்டக்கோழி 2’ படத்தின் டீசரும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன்னர் இதே நட்சத்திர கலைவிழாவில் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படமான இந்த படத்தின் டீசரை உலகமே வரவேற்க தயாராகியுள்ளது.

மேலும் இந்த விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சி குறித்த அறிவிப்புக்கு பின்னர் ரஜினிகாந்த் கலந்து கொள்ளும் முதல் விழா இது என்பதால் இந்த விழாவை தனது முதல் அரசியல் மேடையாகவும் ரஜினிகாந்த் பயன்படுத்தி கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

TOTAL VIEWS : 238
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
myt3k
  PLEASE ENTER CAPTA VALUE.