பிக் பாஸின் பாகுபலியே நம்ம ஓவியாதான்
2017-08-10 23:11:13 | General

'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் நடக்கும் சில நிகழ்வுகளை எல்லாம் பார்க்கும் போது, நாம் ஏன் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை பாகுபலி படத்தோட ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாதுனு என வந்தது இந்த யோசனை!

பிக் பாஸ் பாகுபலி

யாரு பாகுபலியா இருப்பாங்கிற சந்தேகமே உங்களுக்கு வேண்டாம், கண்டிப்பா அது நம்ம எல்லோருக்குமே பிடித்த ஓவியாதான். உள்ள இருந்து கொஞ்ச நாள்களிலேயே பயங்கர ஃபேமஸ் ஆகிட்டாங்க. மீம்ஸ், ஃபேஸ்புக் பேஜ், வீடியோ மீம்னு அவங்களோட ரேஞ்சே மாறிடுச்சு. அதுக்கு முன்னாடி வரைக்கும் எங்க இருந்தாங்க? என்ன பண்ணாங்க?னு யாருக்குமே தெரியாது. ஆனா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அப்புறம் இந்நேரம் எங்க இருக்காங்களோ? என்ன பண்ணிட்டு இருப்பாங்களோ?ங்கிற எண்ணம் எல்லோருக்குமே இருக்கு. சரி நம்ம கதைக்குள்ள வருவோம். அமரேந்திர பாகுபலி, மகேந்திர பாகுபலி ரெண்டு பேருமே ஓவியாதான். பாகுபலி இவங்களா இருந்தா, கண்டிப்பா பல்வாள்தேவனும், அவரோட அப்பா பிங்களத்தேவனும் யாரா இருப்பாங்கன்னு நீங்களே யூகிச்சுருப்பீங்க. காயத்ரிதான் பல்வாள்தேவன் கதாபாத்திரம், சக்திதான் பிங்கள தேவன் கதாபாத்திரம். 

பல்வாள் தேவனின் படைத்தளபதியா வர்றவர்தான் ஜூலி. ஏன்னா ஆரம்பத்துலே இருந்தே இந்த க்ரூப்புக்கும் ஓவியாவுக்கும் மோதல்தான். சப்போர்ட்டுக்கு யாருமே இல்லாம பல சிக்கல்களை எதிர்கொண்டார். சக்தி அறைஞ்சிருவேன்னு சொன்னதும், 'அறைங்க பாப்போம்'னு பதிலுக்கு இவங்க எதிர்த்ததும், இப்படியே சிக்கலில்தான் போய்க்கொண்டிருந்தது. இதே போல்தான் படத்திலும் பாகுபலிக்கும் பிங்களத்தேவனுக்கும் ஆகவே ஆகாது. அது போக எந்த ஒரு முடிவு எடுத்தாலும் சக்தியும் காயத்ரியும் சேர்ந்துதான் எடுப்பாங்க. போர் நேரத்தில் பல்வாள்த் தேவனுக்கு உதவியாளராக நின்றது அவரது படைத் தளபதிதான். போருக்குத் தேவையான எல்லா உதவிகளும் செய்து கொடுப்பார். அதே போல்தான் ஜூலியும் இவர்களுக்கு சண்டை வரும் நேரத்தில் ஓவியாவைப் பற்றி தவறாக கூறுவதும் சண்டை மூட்டிவிடுவதும் இப்படியாகவே இருந்தார். மெயின் கதை இதுதான்.

பிக் பாஸ் பாகுபலி

மற்ற போட்டியாளர்கள் கணேஷ் வெங்கட்ராம், வையாபுரி, சினேகன், ஆரவிற்கும் கதாபாத்திரங்கள் இருக்கிறது. படத்தில் அனுஷ்காவின் மாமாவாக வரும் குமாரவர்மனை சினேகனுடன் ஒப்பிடலாம். எந்த சமயத்திலும் சினேகனும் சரி, குமாரவர்மனும் சரி கோபமே பட மாட்டார்கள். ஆனால் ஓவியா எலிமினேட் ஆன பின் சினேகன் 'நான் எல்லாரையும் எதிர்த்து ஓவியாவுக்கு ஆறுதல் கொடுத்திருக்க வேண்டும்' என்று கண் கலங்கி வருத்தப்பட்டார். அதே போல் படத்திலும் மகேந்திர பாகுபலி குமார வர்மனுக்கு வெறியேத்தி ஒரு கத்தியை கையில் கொடுப்பார். அதை வைத்து எல்லோரையும் வெட்டிச் சாய்ப்பார். கணேஷ் வெங்கட்ராம் எல்லாருக்குமே பொது ஆளாக இருந்து வந்தார். ஆனால் ஓவியா சமீபத்தில் நீச்சல் குளத்தில் குதித்த போது அவர் வரவே இல்லை. அதனால், அவரை கட்டப்பா கதாபாத்திரத்தோடு ஒப்பிடலாம். அதுவும் இல்லாமல் ஆள் பார்ப்பதற்கும் திடகாத்திரமாக இருப்பதால் கட்டப்பா கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருப்பார்.

 

இதில் கடுமையான குழப்பம் ஏற்படுவது ரம்யா கிருஷ்ணனின் சிவகாமி கதாபாத்திரத்திற்குத்தான். ஏனென்றால் வையாபுரி ஆரம்பம் முதல் இருந்தே ஓவியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமலும், அடிக்கடி சண்டை போடாமலும் இருந்து வந்தார். ஆனால் ஓவியா எலிமினேட் ஆன நேரத்தில் 'நீ ஒண்ணும் கவலைப்படாத எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்'னு ஓவியாவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.  மறுபக்கம் ஓவியாவுக்கு வெறித்தனமான ரசிகனாக இருந்து யோசித்தால் அவரை சிவகாமியாக சொல்வதில் தயக்கம் இருக்கிறது. சிவகாமி இறந்தும் குழந்தையை ஏந்தி வந்தது போல் இப்பவும் ஓவியாவுக்கு ஆதரவு கொடுத்து உள்ளே அனுப்பி வைக்க வேண்டும் என்கிற எண்ணம் மக்களிடையே பரவலாக காணப்படுவதால் சிவகாமி கதாபாத்திரம் மக்களாகிய ரசிகர்களுக்கும் பொருந்துகிறது. ஒட்டுமொத்த கதைக்குமே காரணமாக இருக்கும் தேவசேனாவை ஆரவ் கதாபாத்திரத்தோடு ஒப்பிடலாம். இதுதான் கதைச் சுருக்கம். 

பாகுபலி

ஒருவேளை பாகுபலி பிஜிஎம்மை போட்டு மீண்டும் பிக் பாஸ் போட்டிக்குள் வைல்டுகார்ட் ரவுண்டு மூலமாக உள்ளே வந்தால், அதற்குக் முழுக் காரணமும் ஓவியாவின் ஆர்மி, நேவி, ஏர்ஃபோர்ஸாகிய ரசிகர்கள் மட்டுமே. 

TOTAL VIEWS : 304
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
tsk3f
  PLEASE ENTER CAPTA VALUE.