'ரெமோ' ரிலீஸில் சிவ கார்த்திகேயனின் செம தில் முடிவு
2016-10-05 11:49:46 | General

ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்கள் எல்லாம் நூறுகோடி பட்ஜெட்டுக்கு மேல் பணத்தை முதலீடாக போட்ட படத்தை  தமிழகத்தில் ரிலீஸாகும் நான்கு நாட்களுக்கு முன்பே வெளிநாட்டுக்கு  அனுப்பி விடுவார்கள்.

அந்தந்த நாட்டின் சட்டப்படி தமிழ் படங்களுக்கு தனியாக சென்சார் சர்டிபிகேட் வழங்குவார்கள்.  இதுதான் காலங்காலமாக நடந்துவரும் நடைமுறை. இங்கே படம் ரிலீஸாகும் முதல்நாளே அங்கே புதுப்படம் ரிலீஸாகும். அங்கே இருப்பவர்கள் புதுப்படத்தை காப்பி செய்து அப்படியே இன்டர்நெட்டில் படத்தை வெளியிட்டு தயாரிப்பாளரை அதிரவைப்பார்கள்.

அதுமட்டுமல்ல திருட்டு விசிடியும் வெளியிட்டு நிலைகுலைய வைக்கின்றனர். உண்மையில் நெட்டில் படம் உலவுவது, திருட்டு விசிடி வெளிவருவது எல்லாமே வெளிநாட்டுக்கு அனுப்பும் படத்தில் இருந்துதான் என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தும் அதைத் தவிர்க்க முடியாமல் தயாரிப்பாளர்கள் தவித்து வருகின்றனர். 

முன்னணி  நடிகர்கள், பெரிய தயாரிப்பாளர்களே தைரியத்தோடு செய்வதற்கு அச்சப்படும் ஒரு செயலை தனி ஒரு மனிதனாக, நடிகனாக துணிந்து செய்யப் போகும் சிவகார்த்திகேயனுக்கு  தாராளமாக ஒரு பொக்கே தரலாம்.   24பிரேம் தயாரிப்பில் வெளியாகும் 'ரெமோ' படத்தை தமிழகத்தில் மட்டும் அக்டோபர் 7ம்தேதி ரிலீஸ் செய்கிறார்.

அடுத்து 9ம்தேதி அன்று வெளிநாட்டுக்கு அதாவது ஓவர்சீஸ் பகுதிகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்.  இந்த துணிச்சலான செயல் திரைத்துறையினர் வயிற்றில் பாலை வார்த்து இருக்கிறது. அதே சமயத்தில் திருட்டு விசிடி தயாரிப்போர்  நெஞ்சில் நெருப்பை பற்றவைத்து இருக்கிறது.

அதுமட்டுமல்ல முன்கூட்டியே வெளிநாட்டுக்கு படங்களை அனுப்புவதால் வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப்பில் மானாவாரியாக விமர்சனத்தை எழுதி  தமிழ் நாட்டின் சினிமா வியாபாரத்தை கெடுப்பது நடக்காத வண்ணம் உஷாராக நடவடிக்கை எடுத்து இருக்கிறார், சிவகார்த்திகேயன். 

இதுகுறித்து சினிமா உலக ஜாம்பவான் ஒருவரிடம் கேட்டோம். '' ஏற்கெனவே  விஜயகாந்த் நடித்த 'வானத்தைப்போல' படத்தை 2000ம் ஆண்டு ரிலீஸ் செய்தார். அப்போது தமிழகத்தில் 'வானத்தைப்போல' ரிலீஸாகி 20 நாட்கள் கடந்த பிறகுதான் வெளிநாட்டுக்கு படத்தை அனுப்பினார்.

ஓவர்சீஸ் வருமானத்தில் இழப்பு ஏற்பட்டாலும் திருட்டு விசிடி வெளிவராமல் தடுத்தார். இப்போது 16 வருஷத்துக்கு பிறகு ஆஸ்கார் ரவிச்சந்திரன் போன்று துணிச்சலான நடவடிக்கையை  தனது 'ரெமோ' படத்துக்காக எடுத்து இருக்கும் சிவகார்த்திகேயனை உண்மையிலேயே மனம் திறந்து பாராட்டுகிறேன்" என்று நெகிழ்ச்சியாக சொன்னார்.  தமிழ் சினிமாவில் இருந்து ரஜினி படத்துக்கு அடுத்து ஜப்பானின் முக்கியமான நகரத்தில் சிவகார்த்திகேயனின் 'ரெமோ' ரிலீஸாவது சந்தோஷ ஷாக்.  

TOTAL VIEWS : 1386
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
pzeb4
  PLEASE ENTER CAPTA VALUE.