எம்.ஜி.ஆர் படத்தலைப்பு; முதன்முதலில் 3 வேடங்கள்! விஷால் அதிரடி
2017-04-27 11:36:08 | General

கடந்த சில மாதங்களாக தயாரிப்பாளர் சங்க தேர்தல் பணிகளில் பிசியாக ஈடுபட்டிருந்த விஷால் தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். 

ஏற்கனவே மிஷ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன்' மற்றும் மித்ரன் இயக்கத்தில் 'இரும்புத்திரை' ஆகிய படங்களில் நடித்து வரும் விஷால் தற்போது சி.வி.குமார் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்திற்கு 'நாளை நமதே' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் இருவேடங்களில் நடித்து கடந்த 1975ஆம் ஆண்டு வெளிவந்த படத்தின் தலைப்பு தான் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் அந்த படத்தின் ரீமேக் படமா? என்பது குறித்த தகவல் எதுவும் வெளிவரவில்லை

மேலும் இந்த படத்தில் விஷாலுக்கு இரண்டு ஜோடிகள் என்றும், அதற்காக இரண்டு முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அறிமுக இயக்குனர் வெங்கடேசன் இந்த படத்தை இயக்கவுள்ளார்.

TOTAL VIEWS : 828
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
vv5qr
  PLEASE ENTER CAPTA VALUE.