அந்த இடத்தில் படப்பிடிப்பு வேண்டாம்  சிவாவுக்கு அஜித் வைத்த கோரிக்கை
2016-09-29 09:47:55 | General

நடிகர் அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடித்து வருகிறார். இப்படத்தை மிகுந்த பொருட்செலவில் சத்யா ஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது.

சமீபத்தில் தான் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஆஸ்திரியா நாட்டில் முடித்து கொண்டு சென்னை திரும்பியது படக்குழு. இந்நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பை, இயக்குனர் சிவா சென்னை ஈவி பி யில் செட்டு போட்டு நடத்தலாம் என்று இருந்தார்.

அதே இடத்தில் தான் 2.0 படத்தின் படப்பிடிப்பும் நடைபெறுவதால், தனக்கு பிரைவசி இருக்காது என்று எண்ணி ஹைதராபாத்தில் உள்ள ராமராவ் பிலிம் சிட்டியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை வைக்க சொல்லி கோரிக்கை வைத்தாராம் அஜித் .

தற்போது அங்கு படத்துக்கான செட்டு வேலைகள் நடைபெற்றுவருவதாக சொல்லப்படுகிறது.

TOTAL VIEWS : 630
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
hy5vx
  PLEASE ENTER CAPTA VALUE.