இலங்கையின் உயர்கல்விக்கு நூறு மில்லியன் டொலர் உதவி; உலக வங்கி வழங்குகிறது
2017-05-16 15:59:06 | General

இலங்கையின் உயர் கல்வித்துறையின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பதற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கியின் பணிப்பாளர் சபை கடந்த வெள்ளிக்கிழமை  அங்கீகாரம் வழங்கியுள்ளது.


இந்தப் புதிய  முயற்சியானது உயர் கல்வித்துறையின் முன்னுரிமைக்குரிய பிரிவுகளில் அதிகமானவர்களை உள்வாங்குவதற்கும் பட்டப்படிப்பு நிகழ்ச்சித்திட்டங்களின் தரத்தை முன்னேற்றுவதற்கும் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவிப்பதற்கும் உதவும் என உலக வங்கியின் இலங்கைக்கான  வதிவிடப் பணிப்பாளர் ஐடா சுவராய் ரிடில்கொவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது; 


2003ஆம் ஆண்டு முதல் உயர் கல்வித்துறையில் பெறப்பட்ட  அனுபவங்களில் இருந்து விருத்தி செய்யப்பட்ட AHEAD  எனப்படும் புதிய உயர் கல்வி விரிவாக்கல் மற்றும் அபிவிருத்தி துரிதப்படுத்தல் திட்டமானது உலக  வங்கியின் Program for Results lending instrument    பெறுபேறுகளைத் தரும் கடன் கருவித்திட்ட நிதியுதவியை பயன்படுத்தும் முதலாவது திட்டமாகும். நிலைபேறான  அபிவிருத்திப் பெறுபேறுகளை அடைவதற்காக நிறுவன ரீதியான திறன்களை கட்டியெழுப்புவதில் இத்திட்டம் கவனம் செலுத்துகின்றது.


மேல் நடுத்தர வர்க்க நாடு என்ற நிலையை எய்துவதற்கான இலங்கையின் அபிலாஷையானது நாட்டிலுள்ள மக்கள் எந்தளவிற்கு திறனுள்ளவர்களாகவும் பல்துறைசார் ஆற்றலைக் கொண்டவர்களாகவும் இருப்பதிலேயே தங்கியுள்ளது.

 இந்த நாட்டின் நிலைபேறான பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிக்கக்கூடிய அதிக திறன்களைக் கொண்ட விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள், மருத்துவர்கள், தொழில் முயற்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் கல்விமான்கள்  மற்றும் ஆசிரியர்களை உயர் கல்விக் கட்டமைப்பானது உருவாக்க வேண்டும்.


நாட்டில் போட்டித்தன்மையை முன்னேற்றுவதும் வளர்ச்சியை ஏற்படுத்துவதும் இலங்கை அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது. இந்த முயற்சியி3ல் அவர்களுக்கு ஒத்துழைப்பதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

TOTAL VIEWS : 819
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
dbxg7
  PLEASE ENTER CAPTA VALUE.