சுற்றுலாத்துறை நிலுவையாக 500,000 அமெரிக்க டொலர்களை வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய நிலை
2017-04-26 13:28:17 | General

முந்தைய வருடங்களில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் உலக தொலைக்காட்சி அலைவரிசைகளில் மேற்கொள்ளப்பட்ட “சுற்றுலாத்துறை மேம்படுத்தல் பிரசாரங்களுக்கான“ விளம்பர செலவுகளுக்காக நிலுவைத் தொகை 500,000 அமெரிக்க டொலரை மீள செலுத்துவதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.


இச்சம்பவம் தொடர்பாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி, காணி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க கூறுகையில்;


முந்தைய ஆட்சியில் சுற்றுலாத்துறை மேம்படுத்தல்களுக்காக உலகளாவிய தொலைக்காட்சி அலைவரிசைகளில் மேற்கொள்ளப்பட்ட விளம்பர பிரசாரங்களுக்கான கட்டணங்களின் நிலுவைகளின் விளைவாக தற்போது அந்நிறுவனங்களில் எம்மால் எதுவித விளம்பர பிரசாரங்களையும் முன்னெடுக்க முடியாதுள்ளமையானது பாரிய பிரச்சினையாகவுள்ளது.


மற்றும் முன்னாள் சுற்றுலாத்துறை அபிவிருத்தி, காணி மற்றும் கிறிஸ்தவ விவகார  அமைச்சின் செயலாளர் ஜானக சுகததாஸ தெரிவிக்கையில்; இந்நிலுவைத் தொகை பில்லியன் தொகையில் காணப்படுவதுடன், இலங்கை நிலுவைத் தொகையாக 500,000 அமெரிக்க டொலரை செலுத்த வேண்டியுள்ளது.


நாம் அல் ஜசீரா, ஸ்கை நியூஸ் மற்றும் ப்ளூம்பரேஜ் ஆகிய தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு 500,000 அமெரிக்க டொலர் வரையில் செலுத்த வேண்டியுள்ளது. இதுவரை இந்நிலுவை தொடர்பாக அனைத்து விபரங்களையும் திரட்டியுள்ளதுடன், இவ்விபரங்கள் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக அமைச்சரவைக்கு முன்வைக்கப்படவுள்ளது என்றார்.


அதேவேளை 2014 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் மேற்கொள்ளப்பட்டிருந்த பிரசார நடவடிக்கைகள் வெற்றிகரமாக அமைந்திருந்ததாகவும், அவை சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரித்திருந்ததாகவும் குறிப்பிட்டார். மேலும் அவர் குறிப்பிடுகையில்;

கடந்த ஆட்சியின் போது மேற்கொள்ளப்பட்ட உலகளாவிய அலைவரிசைகளின் விளம்பர பிரசாரங்களுக்காக மொத்தமாக 700,000 அமெரிக்க டொலர் வரையில் செலவினங்கள் ஏற்பட்டிருந்த நிலையில், முந்தைய அரசு 200,000 அமெரிக்க டொலரை எஞ்சிய நிலுவைத் தொகையான 500,000 அமெரிக்க டொலர்களை தற்போது செலுத்தவுள்ளோம் என்றார்.


அமரதுங்க தெரிவிக்கையில்; அமைச்சரவையானது மேற்படி இப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஒரு மாத காலப்பகுதிக்குள் வழங்கும் நிலையில், இலங்கை எதிர்காலத்தில் தொலைக்காட்சி விளம்பர மேம்படுத்தல்களை ஆரம்பிக்க முடிவதுடன்,  அவர்களும் எமக்கான விளம்பர பிரசாரங்களை மேற்கொள்ள முன்வந்துள்ளனர்.


தற்போதைய அரசாங்கமானது கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 2 மில்லியன் அமெரிக்க டொலரை  பூம்பரேஜ் அலைவரிசையின் ஊடாக விளம்பர பிரசார திட்டங்களில் ஈடுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

TOTAL VIEWS : 388
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
5gvai
  PLEASE ENTER CAPTA VALUE.