யாழ்நகர அபிவிருத்திக்காக 55,000 மில்லியன் டொலர்; உலக வங்கி வழங்கும்
2016-07-23 11:40:15 | General

யாழ்நகர் நிருபர்


யாழ் நகரின் அபிவிருத்திக்காக 55 ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்கப்படுமென்று யாழ்.வந்த உலக வங்கி அதிகாரிகள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு உறுதியளித்துள்ளனர். 


இந்நிதியூடான அபிவிருத்தித் திட்டங்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் முழு வீச்சில் முன்னெடுக்கப்படுமென்றும் அவ்வதிகாரிகள் முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளனர். 


யாழ்ப்பாணத்திற்கு நேற்று வெள்ளிக்கிழமை உலக வங்கியைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று வருகை தந்திருந்தது. இங்கு வந்த அவர்கள் யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடல் நடத்தியிருந்தனர். 


இதன் ஒரு அங்கமாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் அவர்கள் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இக்கலந்துரையாடலின் பின்னர் முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார். முதலமைச்சர் தெரிவித்த கருத்திலேயே இந்த விடயத்தையும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; 


உலக வங்கி சார்பிலே பல அலுவலகர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த நிலையில் என்னையும் சந்தித்திருந்தார்கள். உலக வங்கியினர் யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பாக ஏற்கனவே எங்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்கள். இவற்றில் யாழ்நகர அபிவிருத்திக்காக 55 ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலர் நிதியைத் தருவதாக உறுதியளித்துள்ளார்கள். 


இந்நிதி மூலமான அபிவிருத்தியின் முன்னேற்ற நடவடிக்கைகள் எதிர்வரும் செப்டெம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் ஆரம்பிக்கப்படும். 
இதன் பின்னர் யாழ்நகர அபிவிருத்தி தொடர்பிலான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவ்வதிகாரிகள் உறுதியளித்ததாகத் தெரிவித்தார். 

 

TOTAL VIEWS : 799
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
q0cbi
  PLEASE ENTER CAPTA VALUE.