33ஆவது மாதிரிக் கிராமமான சுரம்யகம மக்களிடம் கையளிப்பு
2017-07-07 10:01:50 | General

குடியிருப்பு வசதியற்ற ஏழைக்கிராம மக்களுக்கு புதிய வீடுகளையும் மற்றும் ஜீவனோபாய வசதிகளையும் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி அமரர் ரணசிங்க பிரேமதாசவால் உருவாக்கப்பட்ட "கம்உதாவ' மாதிரிக் கிராமத்திட்டத்தை தற்போது நல்லாட்சியில் அவருடைய மகனும் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சருமான சஜித் பிரேமதாச ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் வழிகாட்டலிலும் அறிவுறுத்தலிலும் மீண்டும் ஆரம்பித்து இதுவரை 32 மாதிரிக் கிராமங்களை மக்களுக்கு வழங்கியுள்ளனர்.


இதன் தொடர்ச்சியாக காலி மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட "சுரம்யகம' எனப்படும் 33 ஆவது மாதிரிக் கிராமத்தை மக்களுக்கு வழங்கும் வைபவம் அமைச்சர் 
சஜித் பிரேமதாசவின் தலைமையிலும் பிரதி அமைச்சர் இந்திக பண்டார நாயக்கவின் பங்குபற்றலிலும் நடைபெற்றது.


சுரம்யகம மாதிரிக்கிராமம் காலி மாவட்டத்தில் பெருந்தோட்ட பிரதேச செயலாளர் பிரிவில் மிரிஸ்வத்த பிரதேசத்தில் மாகுருந்த கிராமப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சுரம்யகம மாதிரிக் கிராமம் அனைத்துக் குடியிருப்பு வசதிகளுடன் மின்சாரம் மற்றும் நீர் வசதிகளையும் உடைய 25 புதிய வீடுகளைக் கொண்டதாகும்.

இந்த வீடுகள் போக்குவரத்துக்கான உள்ளக பாதை வசதிகளையும் பிரதான வீதியுடன் தொடர்புடைய பிரவேசப் பாதை வசதியையும் உடையதாகும்.
இந்த "சுரம்யகம' மாதிரிக்கிராமம் கையளிப்பு வைபவத்தில் பயனாளிகளாகிய 25 குடும்பங்களின் தலைவர்களுக்கும் வீட்டுரிமைப் பத்திரங்களை அமைச்சர் 
சஜித் பிரேமதாச நேரடியாகக் கையளித்தார்.

அத்துடன் இந்தக் கிராமப் பிரதேசத்தில் வாழும் விசிரி வீடமைப்புக் கடன் பெற்ற 660 பேருக்கு மொத்தம் ரூபா 660 இலட்சம் பெறுமதியான காசோலைகள் வழங்கப்பட்டன. அத்துடன் இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பயனாளிகளுக்கும் வீட்டுரிமைப் பத்திரங்கள் வழங்கப்பட்டன. அத்துடன் இப்பிரதேசத்தைச் சேர்ந்த சர்வதேச ரீதியில் வெற்றிபெற்ற வீரர் ஒருவருக்கும் மற்றும் வீராங்கனை ஒருவருக்கும் காணி மற்றும் வீடமைப்பு உரிமை பத்திரங்கள் வழங்கப்பட்டன.


இந்த சுரம்யகம கையளிப்பு வைபவத்தில் அமைச்சருடன் இணைந்து பங்குபற்றிய பிரதி அமைச்சர் இந்திக பண்டாரநாயக்க பயனாளிகளுக்கு பத்திரங்கள் மற்றும் காசோலைகளை வழங்கினார்.


இந்த சுரம்யகம 33 ஆவது மாதிரிக்கிராமத்துடன் இதுவரை 800 க்கும் மேற்பட்ட வீடுகள் கம்உதாவ மாதிரிக் கிராமத் திட்டத்தின் கீழ் வீடற்ற கிராம மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

TOTAL VIEWS : 344
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
zcs2y
  PLEASE ENTER CAPTA VALUE.