சிறப்பான வினைத்திறன் பெறுபேறுகளை பதிவு செய்துள்ள எடிசலாட் அழைப்பு நிலையம்
2017-04-26 13:32:40 | General

 

நாட்டின் தொலைத்தொடர்பாடல் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் மத்தியில், தொடர்ச்சியாக நான்காவது காலாண்டாக வெற்றிகரமான வகையில், எடிசலாட் அழைப்பு நிலையம் சிறந்த வினைத்திறன் வாய்ந்த பெறுபேறுகளை பதிவு செய்துள்ளது.


மாதாந்த அடிப்படையில், இலங்கை தொலைத்தொடர்பாடல் ஆணைக்குழுவினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள சேவைத் தரம் தொடர்பில் மாதாந்த அடிப்படையில், எடிசலாட் பேணி வந்துள்ளதுடன், அழைப்பு நிலையத்துடன் வாடிக்கையாளர் ஒருவர் தொடர்பை ஏற்படுத்தியதும், வேகமாக அழைப்புடன் இணைப்பை ஏற்படுத்தும் செயற்படுத்துனரை கொண்ட நிலையமாகவும் திகழ்கிறது.

எடிசலாட் லங்கா சிரேஷ்ட முகாமையாளர்  வாடிக்கையாளர் செயற்பாடுகள், இராஷ் ஃபெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், "2016 இல் எமது வினைத்திறன் தொடர்பில் நாம் தொடர்ச்சியாக திறமைகளை வெளிப்படுத்தியிருந்தோம்.

வாடிக்கையாளர்களுக்கு உதவிகளை வழங்கி, துரித கதியில் நாட்டில் சேவைகளை பெற்றுக் கொடுக்கக்கூடிய முகவர்களை கொண்ட சேவை வழங்குநர் எனும் வகையில் தெரிவாவதற்கு அர்ப்பணிப்பாக உழைத்த அனைவருக்கும் நான் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.


வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமாக அமைந்த சேவைகளை பெற்றுக்கொடுப்பதற்கு எப்போதும் கவனம் செலுத்தும் மொபைல் சேவை வழங்குனர் எனும் வகையில் , எடிசலாட் அழைப்பு நிலையம் என்பது தமது பிரதான வினைத்திறன் குறிகாட்டிகளை மேம்படுத்தும் வகையில் சேவை வழங்கல்களை மேம்படுத்திய வண்ணமுள்ளது.

அதேவேளை, தமது சுழற்சி வேளை மற்றும் முதல் தொடர்பு தீர்வு வழங்கல் ஆகியவற்றையும் பெற்றுக்கொடுத்துள்ளது.

TOTAL VIEWS : 387
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
5trow
  PLEASE ENTER CAPTA VALUE.