இலங்கையின் முதற்தர வங்கியாகவும் தலைசிறந்த 1000 வங்கிகளில் ஒன்றாகவும் இலங்கை வங்கி தெரிவு
2016-07-21 11:36:47 | General

ஐக்கிய இராச்சியத்தின் "The Banker' சஞ்சிகையினால் இலங்கை வங்கியானது (BOC) இலங்கையின் முதற்தர வங்கியாகவும் உலகிலுள்ள தலைசிறந்த 1000 வங்கிகளுள் ஒன்றாகவும் தரப்படுத்தப்பட்டுள்ளது.


இலங்கை வங்கியானது கடந்த காலங்களில் "Asian Banker' சஞ்சிகையினால் இலங்கை வங்கியின் 2015 ஆம் ஆண்டுக்கான கையிருப்புத் தொகைக்கமைய இலங்கையின் "உறுதியான வங்கியாக' தெரிவு செய்யப்பட்டுள்ளது.


மேலும் BOC ஆனது தேசிய வர்த்தக சிறப்பு விருது நிகழ்வில் தொடர்ச்சியாக 8 ஆவது தடவையாக இலங்கையின் முதற்தர வர்த்தக நாமம் என்ற பிரிவில் தங்க விருதை வென்றுள்ளது.

2012 ஆம் ஆண்டு ஒரு ட்ரில்லியன் சொத்து என்ற அடைவை அடைந்துள்ளது. இதேவேளை கடந்த 2014 ஆம் ஆண்டு இலங்கை வங்கியின் வரிக்கு முன்னரான இலாபம் 20.3 பில்லியன் ரூபாவாகும்.

கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கையில் தனிநபர் வர்த்தகமாக வரிக்கு முன்னரான இலாபமாக 25.3 பில்லியன் ரூபாவை பெற்றுள்ளது. இதனை கடந்த 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 25% வளர்ச்சியாகும்.


இலங்கை வங்கியானது உறுதியான கையிருப்பு மிகுதித் தொகையை உள்நாட்டிலும் வெளிநாட்டு பணவருவாயினூடான சேமிப்பின் மூலம் பெற்றுள்ளது. BOC ஆனது தற்போது பாரிய வெளிநாட்டுப் பணத்தினை பெறும் வங்கியாளனாக உள்ளது.

Fitch Rating Lankaவினால் இலங்கை வங்கியானது AAT (lka) தரத்தை பெற்றுள்ளதுடன், உள்நாட்டு வணிக வங்கி மற்றும் ICRA AAA தரப்படுத்தப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். இலங்கை வங்கியானது 77 வருடகாலமாக இலங்கையின் வங்கியியல் துறையில் நம்பிக்கையான, உறுதியான வங்கியாக உள்ளது.


ஐக்கிய இராச்சியத்தின் "The Banker' சஞ்சிகையானது உலகிலுள்ள முதன்மையான வங்கியியல் மற்றும் நிதியியல் சஞ்சிகையாகும். இது 1926 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 1970 ஆம் ஆண்டு இச்சஞ்சிகையானது 1000 வங்கிகளை தரப்படுத்தியுள்ளது.

நிதியியல் தரவுகள், செய்திப் பின்னணி மற்றும் அனைத்து நாடுகளிலுள்ள வங்கிகளின் தரங்கள், அடைவுகள், சாதனைகளை உள்ளடக்கியதாக வெளியிடப்படுகின்றது.


உலகிலுள்ள 1000 தலைசிறந்த வங்கிகள் என்ற நாமமானது இலங்கை வங்கிக்கு கிடைத்தமையானது நாட்டினது நிதியியல் துறைக்கு சிறப்பாகவுள்ளதுடன் இவ்விலக்கானது வங்கி பங்குதாரர்கள், வாடிக்கையாளர், இலங்கை அரசாங்கம் ஆகியவற்றுக்கு பெருமை அளிப்பதாக இவ்விரு இலக்கினை மிகைப்படுத்திக் காட்டுவதாக இலங்கை வங்கியின் தலைவரான ரொனால்ட் சி.பெரேரா தெரிவித்தார்.


இலங்கையின் முன்னணி வங்கி என்ற ரீதியில் நாம் அதிசிறந்தவற்றை பெற்றுக்கொள்வதை நோக்கிச் செல்வதாகவும் இவ்விலக்கினை அடைய உதவிய வங்கி ஊழியர்கள் மற்றும் அவர்களுடைய கடினமான உழைப்பு போன்றவற்றுக்கு நன்றி தெரிவிப்பதாக இலங்கை வங்கியின் பொது முகாமையாளர் டி.எம். குணசேகர தெரிவித்துள்ளார்.


இலங்கை வங்கியானது நாடளாவிய ரீதியில் தற்போது 626 கிளைகள், 15 SME நிலையங்கள் மற்றும் 550 ATM இயந்திரங்கள், CDMS இயந்திரங்களையும் கொண்டுள்ளது.

TOTAL VIEWS : 1221
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
6hjnw
  PLEASE ENTER CAPTA VALUE.