15 வருடங்களின் பின்னர் இலங்கையரின் தனிநபர் வருமானம் வீழ்ச்சி
2017-05-02 00:49:47 | General

கடந்த வருடம் இலங்கையில் தனிநபர் வரும் 3885 அமெரிக்க டொலர் வரை குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கியின் புதிய வருடாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

15 வருடங்களின் பின்னரே இவ்வாறு தனிநபர் வருமானம் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இறுதியாக 2001ஆம் ஆண்டும் தனிநபர் வருமானம் குறைவடைந்துள்ளது.

அமெரிக்கா டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை நாணயத்தின் பெறுமதி இதற்கு பிரதான காரணமாகியுள்ளதென மத்திய வங்கி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ரூபாயின் பெறுமதிக்கமைய தனிநபர் ஒருவரின் வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2015ஆம் ஆண்டு 522.355 ரூபாவாக காணப்பட்டுள்ளது. இந்நிலையில் அதனை கடந்த வருடத்துடன் ஒப்பிடும் 558.363 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளதுடன், அது நூற்றுக்கு 4.7 வீத அதிகரிப்பாகும்.

எனினும் சர்வதேச நாடுகளில் தனிநபர் வருமானம் அமெரிக்க டொலரின் பெறுமதிக்கமையவே மதிப்பிடப்படும். அதற்கமைய 2016ஆம் தனிநபர் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

TOTAL VIEWS : 869
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
v3crr
  PLEASE ENTER CAPTA VALUE.