இலங்கைக்கும் மெல்பேர்னுக்கும் இடையில் நேரடி விமான சேவை
2017-05-29 09:35:57 | General

இலங்கைக்கும் மெல்பேர்னுக்கும் இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி முதல் இந்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

மெல்பேர்ன்  கொழும்பிற்கு இடையிலான நேரடி பயணங்களுக்கு A330 - 300 ரக விமானம் பயன்படுத்தப்படவுள்ளது.

மெல்பேர்னிற்காக ஸ்ரீலங்கன் விமான சேவையின் நாளாந்த பயணத்தின் போது ஒவ்வொரு முறையும் 283 பயணிகள் அழைத்து செல்லப்படவுள்ளனர்.

நேரடி சேவையின் மூலம் பத்து மணித்தியாலங்களில் இலங்கையிலிருந்து மெல்பேர்ன் செல்ல முடியும். இது குறித்து மெல்பேர்ன் விமான நிலைய அதிகாரி, ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

TOTAL VIEWS : 590
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
i6ugh
  PLEASE ENTER CAPTA VALUE.