2018 ஜனவரியில் சிங்கப்பூர் - இலங்கை வர்த்தக உடன்படிக்கை
2017-11-20 14:00:24 | General

தேசிய ஏற்றுமதிக்கான மூலோபாயங்களை வகுப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று தமது அமைச்சிற்கான நிதிஒதுக்கீட்டு வரவுசெலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
 
முற்போக்கு வரவுசெலவுத்திட்டம் இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எமது நாடு சர்வதேச ரீதியில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு தற்போது வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.
 
சமகால நல்லாட்சி அரசாங்கம் அடிப்படை வசதிகளுக்காக செலவிடுவதிலும் பார்க்க நேரடி வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது.
 
எமது பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு தனியார் துறையினரின் ஒத்துழைப்பு அவசியமாகும். 99சதவீதமான சிறிய வர்;த்தக நிறுவனங்களுக்கும் மத்திய வர்த்தகத்துறையினருக்கும் வர்த்தக நடவடிக்கைகளுக்காக சிறந்து சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 
இவர்கள் நம்பிக்கை கொள்ளக்கூடிய வகையில் தற்பொழுது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. ஊக்குவிப்பு நவீன தொழில்நுட்ப சுதந்திர வர்த்தகம் என்பனவற்றை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

இரு தரப்பு உடன்படிக்கை முக்கியமாகும். இதனை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். இந்தியா வேகமாக பொருளாதார ரீதியில் அபிவிருத்தி அடைந்துவருகின்றது.
 
இதற்காக உடன்படிக்கைகளுக்கான வெற்றிகரமான பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. ஆடைத்தொடிழிற்துறையை பொறுத்தவரையில் 400மில்லியன்  அமெரிக்க டொலர்களுக்கான வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும். சிங்கப்பூருடன் 2018ஆம் ஆண்டுக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது.

TOTAL VIEWS : 323
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
7qiyn
  PLEASE ENTER CAPTA VALUE.