சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளில் கைச்சாத்திட முன்னர் தேசிய வர்த்தக கொள்கை உருவாக்கப்படுவது அவசியம்; இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனம் தெரிவிப்பு
2017-05-05 17:36:13 | General

அரசாங்கமானது எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளவுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் தொடர்பாக நேர்மையானதும் உண்மையானதுமான கலந்துரையாடல்களை  தனியார் துறையினருடன் மேற்கொள்ள வேண்டும் என இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தின் தலைவரான சுஜீவ சமரவீர தெரிவித்துள்ளார்.


குறிப்பாக சீனாவுடனும் சிங்கப்பூருடனும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், தனியார் துறையினரை திருப்திப்படுத்துவதற்கு அவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்துவது அவசியமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்; 


"இந்நிலையில் நாட்டுக்கு தேசிய வர்த்தக கொள்கை ஒன்று அவசியமாக தேவைப்படுகிறது. இவ்வாறு தேசிய வர்த்தகக் கொள்கையை உருவாக்குவதன் மூலம் அது இலங்கையானது எந்த ஒரு நாட்டுடனும் எந்தவொரு  வர்த்தக உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கும் தேவையான வழிகாட்டல்களை வழங்குவதற்கும் அறிவுறுத்தல்களை வழங்குவதற்கும் இடமளிக்கும்.


 சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளின் ஒட்டுமொத்த அம்சங்களும் தேசிய வர்த்தக கொள்கையானது தயாரிக்கப்படுமானால் அதனூடாகவே பார்க்கப்படும் எனவும்  சமரவீர குறிப்பிட்டுக் கூறினார்.  சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்று தயாரிக்கப்படும் போது நன்மைகள் ஒப்பிட்டு பார்க்கப்பட வேண்டும்.


தேசிய சம்மேளனம் என்ற நிலையில் அரசாங்கமானது ஏனைய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபடும் போது ஊக்குவிக்காது இருக்க மாட்டோம்.


ஆனால் எந்தவகையான வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொள்ள முன்னர் அந்த உடன்படிக்கை சரியான முறையில் அமைவதற்கு அரசாங்கத் துறைக்கும் தனியார் துறைக்கும்  இடையில் ஒழுங்கானதொரு உரையாடல் இடம்பெற வேண்டும் என்பதையே நாம் வலியுறுத்துகிறோம் என்றார். சமரவீரவின் கருத்துக்கிணங்கி இந்த உடன்படிக்கைகளினது முழுமையானதும் இறுதியானதுமான நோக்கமானது ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதுடன் நாட்டில் தொழில் முயற்சியாண்மையை மேம்படுத்துவதுமாகும்.


மேலும் இதில் சமரவீர குறிப்பிட்டு கூறிய விடயமென்னவென்றால் இலங்கையானது  கிட்டிய எதிர்காலத்தில் மிகவும் உறுதியான பொருளாதாரங்களை பெற முடியும் என்ற நிலைப்பாடு உள்ளதா என்பதை அறிந்து ஆராய்ந்தே சுதந்திர  வர்த்தக உடன்படிக்கையில் உள்நுழைய வேண்டும்.

அத்துடன்  இலங்கையில் விலை குறைப்புக்கான விதிகளை உருவாக்குவதும் அவசியம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் எமது உள்நாட்டு தொழிற்றுறையை பொருத்தமற்ற வர்த்தக நடைமுறைகளில் இருந்து பாதுகாப்பதற்கு  பொதுவான ஒரு பொறிமுறை அவசியமாகும் என்றார்.


தமது சம்மேளனமானது சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு எப்போதும் போல் தொடர்ந்தும் தேவையான வசதிகளை வழங்கவும் சந்தைப்படுத்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளவும் தயாராக உள்ளதாகவும்'அவர் தெரிவித்தார்.

 

TOTAL VIEWS : 534
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
wwm9f
  PLEASE ENTER CAPTA VALUE.