வட, கிழக்கு உட்பட 4 மாகாணங்களில் முதலீடுகளை மேற்கொள்ள விரும்பும் நோர்வே; 20 ஆம் திகதி கொழும்பில் மாநாடு
2017-03-27 14:21:07 | General

வடக்கு  கிழக்கு உள்ளிட்ட நாட்டின் 4 மாகாணங்களில் முதலீடுகளை மேற்கொள்ள விரும்பும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று நோர்வோ அரசின் ஏற்பாட்டில் அடுத்த மாதம் 20 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.


முதலீட்டு மாநாடு தொடர்பில் 4 மாகாண முதலமைச்சர்களுடனும் நேரடியாகக் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், அந்த மாகாணங்களின் கீழ் உள்ள மாவட்டச் செயலாளர்களுடன் ஆராயப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


நோர்வே அரசின் நிதிப் பங்களிப்பில் அரச சார்பற்ற நிறுவனம், கொழும்பில் முதலீட்டாளர் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. வெளிநாடுகளிலுள்ள முதலீட்டாளர்கள், பெரும்பாலும் தமிழ் முதலீட்டாளர்கள் இந்த மாநாட்டில் பங்குபற்றவுள்ளனர். சுமார் 60 பேர் வரையில் கலந்து கொள்ளவுள்ளனர்.


வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மாகாணங்களில் முதலீட்டுக்கான வாய்ப்புக்கள் தொடர்பில் இந்த மாநாட்டில் ஆராயப்படவுள்ளது.


இந்தப் பிரதேசங்களில் தொழில் வாய்ப்புக்களை வழங்கக்கூடிய தொழிற்சாலைகளை அமைப்பது உள்ளிட்ட மிகப் பெரியளவிலான முதலீடுகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.


சம்பந்தப்பட்ட மாகாணங்களின் திட்டமிடல் கிளைகள் ஊடாக, முதலீட்டுக்கான வாய்ப்பு தொடர்பான அறிக்கைகள் ஏற்கனவே பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன், மாகாணங்களின் முதலமைச்சர்களுடனும் சந்திப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோன்று இந்த மாகாணங்களின் கீழ் உள்ள மாவட்டச் செயலாளர்ளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

 

TOTAL VIEWS : 391
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
daz0a
  PLEASE ENTER CAPTA VALUE.