நவீன பீங்கான் உற்பத்திகளை அறிமுகம் செய்துள்ள Noritake நிறுவனம்
2016-07-26 15:29:54 | General

அண்மையில் கொழும்பு ஹில்டனில் தமது புதிய நவீனமான பீங்கான் பாத்திரங்கள், bone china, Stoneware மற்றும் முள்ளுக் கரண்டிகளை நொரிடேக் லங்கா போர்ஸ்லைன் அறிமுகம் செய்தது. நேர்மை, அதிர்ஷ்டம், நம்பிக்கை, சமூகப் பங்களிப்பு, சிறப்பான வாழ்க்கை என்பன இந்நிகழ்வின் தொனிப்பொருளாகும்.


ஜப்பான் மற்றும் இலங்கையை ஒருங்கிணைக்கும் இந்நிகழ்வில் ஜப்பானியக் கடதாசிகளை கொண்டு நீலத் தாமரை அமைக்கப்பட்டதுடன் மாலை நேர நடனமானது நொரிடேக் லங்கா போர்ஸ்லைன் தலைவர் வை.முபாச்சியின் வரவேற்புரைக்குப் பின் இடம்பெற்றது. தொடர்ந்து நொரிடேக் நிறுவனத்தின் உலக அளவிலான வெற்றியை சிறப்பு விருந்தினர்களுடன் பகிர்ந்துகொள்ளும் முகமாக வீடியோ தொகுப்பு ஒளிபரப்பு செய்யப்பட்டது. 

மற்றும் சிறந்த தரத்திலான நன்கு தொழிற்திறமை வாய்ந்தவர்களால் உருவாக்கப்பட்ட பீங்கான் பொருட்கள், Stoneware, bone china, முள்ளுக்கரண்டிகள் போன்ற 5 வகையான பொருட்கள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டன.

அறிமுகம் செய்யப்பட்ட ஐவகைப் பொருட்களில் NLPL`Sஇனால் அறிமுகம் செய்யப்பட்ட மெல்லிய, ஒளி ஊடுருவக் கூடிய, பிரகாசத்தைத் தரக் கூடிய வெண்மையான Cher Balanc எல்லா விழாக்களுக்கும் பயன்படுத்த கூடியதாகவுள்ளதுடன், அதேபோன்ற தன்மைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள GRANDIR பீங்கான்களின் அழகை சிறப்பாக வெளிப்படுத்துவதுடன் நவீனமாக உணவு வகைகளைப் பரிமாறவும் உதவுகிறது.

இலங்கையிலும் உலகில் பல பிரசித்தி பெற்ற நட்சத்திர விடுதிகளிலும் பயன்படுத்தப்படும் நொரிடேக் Culinary Whiteஆனது வெப்ப பாதுகாப்பு கொண்ட, அடர்த்தியான நீடியகால பாவனையைக் கொண்டது. மற்றும் அதிநவீன வடிவத்தையும் தோற்றத்தையும் கொண்டு கற்பதிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ள Color Wabe இரவு விருந்துகளில் மேசைகளை வடிவமைக்க சிறப்பானது, மற்றும் நொரிடெக்கின் நவீன தோற்றத்திலான, கறை பிடிக்கும் தன்மை அற்ற, தரமான உலோகத்திலான, பாரமற்ற Rochefort முள்ளுக் கரண்டிகள் மேலும் மேசையை அலங்கரிக்கின்றன.

TOTAL VIEWS : 681
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
kn0lr
  PLEASE ENTER CAPTA VALUE.