உலகப் புகழ்பெற்ற Ben 10 மற்றும் Barbie சைக்கிள்கள் இலங்கையில் அறிமுகம்
2017-09-11 12:05:48 | General

Cartoon Network நிறுவனத்தினால் தயாரித்து வழங்கப்பட்ட Ben 10 கார்ட்டூன் உலக அளவில் பெரும் வெற்றி பெற்றதும் மிக நீண்டதுமான கார்ட்டூன் தொடராக மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த ஒரு ஜனரஞ்சகமான படைப்பாகும்.

Ben 10 கார்ட்டூன் தொடர் குழந்தைகளின் பலத்தையும் ஆற்றல்களையும் பிரதிபலிப்பதாக உருவாக்கப்பட்டது. Barbie உலகெங்கிலும் உள்ள சிறுமிகளினதும் யுவதிகளினதும் மொடல் அடையாளமாக மாறியது. யுவதிகள் விரும்பும் எதையும் செய்யக்கூடிய ஆற்றலையும் தூண்டுதலையும் வழங்கும் Barbie கதாபாத்திரம் பெரும் வெற்றி பெற்ற ஒரு கதாபாத்திரம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 


எமது நாட்டின் சைக்கிள் சந்தையின் முன்னோடியாக விளங்குகின்ற Tomahawk நிறுவனம் இலங்கைக்கு பெருமை சேர்க்கும் வகையில்  Ben 10 மற்றும் Barbie சைக்கிள்களை இலங்கை முழுவதும் விநியோகிக்கும் அங்கீகாரம் பெற்ற ஏக முகவராக விளங்குகிறது.

அதற்கு தேவையான சிறப்பு உரிமத்தை அமெரிக்காவின் Mattel Inc. மற்றும் Warner Brothers நிறுவனங்களிடமிருந்து பெற்றுள்ள Tomahawk நிறுவனமானது அதன் மூலம் தமது சைக்கிள் சந்தைக்கு சிறப்பு பெறுமதியை சேர்த்துள்ளது.


இலங்கையில் முதற் தடவையாக ஏற்பட்டுள்ள இந்த கூட்டிணைவின் மூலம் Tomahawk நிறுவனம் மேலும் பல மடங்கு வளர்ச்சியை அடைந்துள்ளது. ஆரோக்கியமாகவும் பலத்துடனும் இருப்பதற்கு சைக்கிள் மிதிப்பது இன்றியமையாத ஒன்றாகும்.

Tomahawk சைக்கிள் இப்பொழுது அதை இலகுபடுத்துவதோடு பாதுகாப்பாகவும் கலகலப்பாகவும் சைக்கிள் மிதிக்க அது வழியமைத்துள்ளது. மிகச் சிறந்த வர்த்தக நாமமாக Tomahawk ஏற்படுத்திக் கொண்டுள்ள புகழும் நம்பிக்கையுமே Mattel Inc. மற்றும் Warner Brothers நிறுவனங்களுடன் கூட்டு சேர்வதற்கு காரணமாக அமைந்துள்ளது.

சிறுவர், இளைஞர், பெண்கள் மற்றும் மூத்தோர் என அனைத்து வயதினர்களினதும் வாழ்க்கைக்கு மகிழ்ச்சியை கொண்டு வருவதற்கு பங்களிப்பு செய்துள்ள Tomahawk சைக்கிள்களில் உள்ள நிகரற்ற தரம், கவர்ச்சிகரமான தோற்றம் மற்றும் விற்பனைக்கு பிந்திய சிறந்த சேவை ஆகியவையே சைக்கிள் சந்தையில் புத்தாக்கம் மிக்கதும் நம்பிக்கை மிக்கதுமான வர்த்தக நாமமாக Tomahawk தடம் பதிக்க காரணமாக அமைந்துள்ளது.

 

TOTAL VIEWS : 324
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
3mxas
  PLEASE ENTER CAPTA VALUE.