ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை கட்டுப்படுத்த முடியாதுபோனமை ஏன் எனக் கேள்வி
2016-12-05 12:10:35 | General

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதியின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாது போனமை குறித்து மத்திய வங்கி ஆளுநரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.


பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவும் இந்த கேள்வியை மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியிடம் எழுப்பியுள்ளனர்.


அண்மையில் பாராளுமன்ற கட்டிடத்தில் இடம்பெற்ற பொருளாதார விடய குழுக்கூட்டத்தின் போது இந்தக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.


இந்த நிலையில் உரிய பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்று பிரதமர் இதன்போது மத்திய வங்கியின் ஆளுநரிடம் கோரியுள்ளார்.


இந்தக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் சிலர், ரூபாவின் வீழ்ச்சியை 147 ரூபா 50சதத்துக்கு உட்பட்டநிலையில் வைத்திருக்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் விருப்பத்தை நினைவுப்படுத்தினர்.


இதே நேரம்  இலங்கையின் பொருளாதாரம் 2017 ஆம் ஆண்டு 6.3 வீத வளர்ச்சியை எட்டும் என இலங்கை மத்திய வங்கி மதிப்பிட்டுள்ளது.


நாடு தற்போதுள்ள பொருளாதார பின்னடைவில் இருந்து மீளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.2018 ஆம் ஆண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது 8 வீதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


எது எப்படியிருந்தபோதிலும் 2016 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சியானது, 5 முதல் 5.5 வீதமாகவே இருக்கும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

 

TOTAL VIEWS : 1662
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
e5lrm
  PLEASE ENTER CAPTA VALUE.