பணவீக்கம் ஆகஸ்ட் மாதம் 7.9% ஆக உயர்வு
2017-09-25 13:14:31 | General

கடந்த ஜூலை மாதம்  6.3% ஆக இருந்த நாட்டினது பண வீக்கமானது ஆகஸ்ட் மாத முடிவில்  7.9% ஆக உயர்வடைந்துள்ளதுடன், உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களின் பிரிவானது ஆகஸ்ட் மாத பண வீக்கத்தில் பங்களிப்பு செய்துள்ளது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் பண வீக்கமானது மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தொகை மதிப்பு புள்ளிவிபர திணைக்களம் அறிவித்துள்ளது.


இதேவேளை, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் வருடாந்த சராசரியானது அதிகரித்துள்ளது. இதற்கமைய கடந்த ஜூலை மாதம்  6.2 % ஆக  இருந்த வருடாந்த சராசரியானது ஆகஸ்ட் மாதம் 6.5% ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் மாதாந்த அடிப்படையிலும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணானது மாற்றமடைந்துள்ளது. ஜூலை மாதம்  122.4 சுட்டெண் புள்ளிகளாக இருந்த தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணானது  122.3 புள்ளிகளாக ஆகஸ்ட் மாதம் வீழ்ச்சியடைந்துள்ளது.


இம் மாதாந்த வீழ்ச்சியில் உணவுப் பொருட்களின் விலைகளானது பிரதானமாக பங்களிப்புச் செய்துள்ளது. இதற்கமைய காய்கறிகள், சிவப்பு வெங்காயம், வெள்ளைப்பூடு, உடனடி மீன்கள், அரிசி போன்றவைகளின் விலைகளானது கடந்த மாதம் வீழ்ச்சியடைந்துள்ளன. இருப்பினும் கடந்த மாதம் பெரிய வெங்காயம், சில வகை பழங்கள், தேங்காய், உருளைக்கிழங்கு போன்றவைகளின் விலைகளும்  அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 


மேலும் புடவைகள் மற்றும் பாதணிகள், தளபாடங்கள், வீட்டு உபகரணப் பொருட்கள், வீட்ப் பராமரிப்புப் பொருட்கள், சுகாதாரம் ( தனியார் வைத்தியசாலைகளில் அறைகளுக்கான கட்டணம்), போக்குவரத்து, கல்வி, பொருட்கள் மற்றும் சேவைகளின் உப பிரிவுகள் போன்றவைகளின் விலைகளானது கடந்த மாதம் அதிகரித்துள்ளன.


வீடமைப்பு, நீர், மின்சாரம், சமையல் எரிவாயு மற்றும் பிற எரிபொருட்கள், தொலைத் தொடர்பாடல் போன்றவைகளின் கட்டணமானது கடந்த மாதம் உயர்வடைந்துள்ளது. 
இதேவேளை, மதுபான வகைகள் மற்றும் புகையிலை சார்ந்த உற்பத்திகளின் விலைகளும் இக்காலப் பகுதியில் அதிகரித்துள்ளன.

இருப்பினும் பொழுது போக்கு அம்சங்கள் , உணவு விடுதிகள் மற்றும்  ஹோட்டல்கள் போன்றவைகளின் கட்டணங்களில் எத்தகைய மாற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணுடன் இணைந்த பண வீக்கத்தின் அடிப்படையில் ஜூலை மாதம்  4.2% ஆக இருந்த பொருளாதார வளர்ச்சியானது ஆகஸ்ட் மாதம்  4.8% ஆக உயர்வடைந்துள்ளது.

TOTAL VIEWS : 517
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
4dxad
  PLEASE ENTER CAPTA VALUE.